"ஸ்டாலினை சுற்றி நிற்கும் இன்விசிபிள் செக்யூரிட்டி டீம்: டெல்லி லாபிக்கு எதிராக ஸ்கெட்ச் போடும் சபரீசன்

First Published Jun 19, 2017, 1:23 PM IST
Highlights
inivisible security team around stalin


’ஜனநாயகம் விற்பனைக்கு’ என்ற டைட்டிலுடன் மூன் டி.வி, டைம்ஸ் நவ் இரண்டும் இணைந்து வெளியிட்ட வீடியோ காட்சிகள் தமிழகத்தில் தேர்தல் அரசியலின் தேர்டு கிரேடு குணங்களை உரித்துக் கொட்டியுள்ளன. இதன் மேல் விவாதங்கள், விவகாரங்கள், வில்லங்கங்கள் என்று களேபரப்பட்டுக் கிடக்கிறது தமிழக அரசியல் சூழல். சட்டமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் காரணிகளில் இதுவும் ஒன்றாகி போனது. 

பொதுவாக இது போன்ற ‘ஸ்டிங் ஆபரேஷன்களில்’ இறங்கும் புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது கிடையாது. ஆனால் இந்த ஆபரேஷனின் கிரியேடீவ் ஹெட் ஆன மூன் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் ஷாநவாஸ் கான் தன்னை தங்கு தடையில்லாமல் எக்ஸ்போஸ் செய்திருக்கிறார். அவரே சென்சேஷனல் பேட்டிக்குரிய மனிதராகியிருக்கிறார். 

பத்திரிக்கையாளனுக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது என்கிற வாதத்தை சற்றே தள்ளிவைத்துவிட்டு விஷயத்தை கவனிப்போம்... 

எம்.எல்.ஏ. சரவணனை டிராப் பண்ணியதை பத்திரிக்கையிடம் பேசியிருக்கும் ஷாநவாஸ் “ஏப்ரல் 1_ம் தேதி முதல் மே 25_ம் தேதி வரை இதற்கான காலமாக எடுத்துக் கொண்டோம். சரவணனை எங்கள் அலுவலகத்துக்கு வரவைத்து சந்தித்தது மட்டுமில்லாமல் அவரோடு திருநெல்வேலி வரை பயணித்து, அவர் சொல்லிய தகவல்களின் உண்மைத்தன்மையை அவர் அறியாமலேயே கிராஸ் செக் செய்தோம். அனைத்தையும் ரகசிய கேமெரா மூலமாக ஆதாரப்படுத்தினோம். 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முதலில் 2 கோடி ரூபாய் தருவதாக பேசியிருக்கிறார்கள். அடுத்து கவர்னர் மாளிகைக்கு கூட்டிச் சென்றபோது நான்கு கோடி தருவதாக சொன்னார்கள். பிறகு கூவத்தூர் விடுதியில் தங்கவைத்த போது ஆறு கோடி தருவதாக உறுதியாக சொன்னார்கள். பணமாக இல்லாததால் தங்கமாக தருவதாக சொன்னார்கள்...என்றெல்லாம் சரவணன் புட்டுப்புட்டு வைத்ததை சிலாகித்து பகிர்ந்திருக்கிறார் ஷாநவாஸ். 

இவரது பேட்டியினூடே வெளிவந்திருக்கும் வேறு சில தகவல்கள் பெரும் தகிப்பைக் கிளப்பியுள்ளன. அதாவது கேமெரா இருப்பதை உணராமல் பல விஷயங்களை போட்டுடைத்த எம்.எல்.ஏ. சரவணன், அதுவரை நடந்த விஷயங்களை பகிர்ந்தது மட்டுமில்லாமல், கூடிய விரைவில் நடக்கப்போவதாக சில தகவல்களையும் சொல்லியிருக்கிறார். அவை அப்படியே பலித்திருக்கின்றன. ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து, சசி அணியிலிருந்து சில எம்.எல்.ஏ.க்கள் உள்கலகம் செய்வார்கள் என்றாராம் அதுவும் நடந்தது. இதுமட்டுமல்ல சரவணன் சொல்லிக்காட்டி சில புரோக்கர்கள் ‘கூடிய விரைவில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடக்கும்.’ என்றார்களாம், அதுவும் நடந்தது. அடுத்து கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சோதனை நடக்கும் என்றார்களாம் அதுவும் நடந்தது. 

இந்நிலையில் கடைசியாக ‘ஸ்டாலிந்தான் நெக்ஸ்ட் டார்கெட்’ என்றார்களாம். இது ஷாநவாஸை அதிர்ச்சியாக்கியதாம். அந்த தகவலை இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்டியலசியபோது ”தமிழகத்தில் தற்போதைக்கு வைபரெண்டாக இருக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான். இப்போது தேர்தல் நடத்தினால் தி.மு.க. அமோகமாக வெல்லும், ஆட்சியமைக்கும். அதன் பிறகு நெடுங்காலத்துக்கு அக்கட்சியை அரியணையிலிருந்து அகற்ற முடியாது என்று டெல்லி லாபி நினைக்கிறதாம். 

அதனால் தேர்தலுக்கு முன் ஸ்டாலினுக்கு செக் வைக்க ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம். அது தி.மு.க.வை பெரியளவில் சரித்துக் காட்டுவதாகவோ அல்லது ஸ்டாலினின் பெயரை மக்கள் மன்றத்தில் டேமேஜ் ஆக்கும் விதமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தகவலாம். 

இதை அப்படியே பத்திரிக்கையிடம் பகிர்ந்திருக்கிறார் ஷாநவாஸ். ஸ்டாலினின் காதுகளையும் இந்த தகவல் எட்டியிருக்கும் நிலையில், இன்விசிபிளாக (கண்ணுக்கு புலனாகாத) ஒரு செக்யூரிட்டி கமிட்டியே ஸ்டாலினுக்காக இயங்க ஆரம்பித்திருக்கிறதாம். அதான் இயந்திர துப்பாக்கிகளோடு போலீஸ் பாதுகாப்பே அவருக்கு இருக்கிறதே? என்கிறீர்களா! ஆனால் இது வேறு விதமான பாதுகாப்பு குழு. வருமான வரித்துறை ரெய்டில் துவங்கி பழைய பர்ஷனல் விஷய அட்டாக் வரை எந்த வகையிலும் ஸ்டாலினை நோக்கி அம்புகள் பாயலாம் என்பதால் அதை எப்படி எதிர்கொள்வது, பழைய விவகாரங்கள் கிளறப்பட்டால் அதற்கு எப்படி ஆதாரப்பூர்வ விளக்கம் கொடுப்பது, புதியதாக எதுவும் புனைந்து உருவாக்கப்பட்டால் அதை எப்படி மூக்குடைப்பது என்பதை அலசி ஆராய்ந்து பவர்ஃபேக்டாக இருக்கிறதாம் அந்த டீம். 

2ஜி விவகாரத்தில் தி.மு.க.வுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தாலும் கூட அது ஸ்டாலினின் இமேஜை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே புதிய வகையிலான தாக்குதலுக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி பரபரப்பதில் ஸ்டாலினுக்கு பெரிய அளவில் ஈடுபாடில்லை. ‘நாம எந்த தப்பும் பண்ணல. வர்றது வரட்டும், பார்த்துக்கலாம்.’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவரது மருமகன் சபரீசன் தான் ஃபுல் எக்யூப்டாக எல்லாவற்றையுமே தயார் செய்து வைத்திருப்பதாக தகவல். 

வருமான வரித்துறையோ அல்லது மத்திய போலீஸோ....எதுவாகிலும், ஒருவேளை ஸ்டாலினை முடக்கும் வகையில் ஏதாவது அஸ்திரங்கள் பாய்ச்சப்பட்டால் தமிழத்தில் பெரும் அதிர்வுகளை கிளப்பும் போராட்டங்களை நிகழ்த்திட தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகவே தகவல். 

ஆக கூடிய விரைவில் ஏகப்பட்ட ‘பிக் பிரேக்கிங் நியூஸ்’களை எதிர்பார்க்கலாம்.

click me!