கூண்டோடு கலைக்கப்பட்டது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு... ஓபிஎஸ், இபிஎஸ் அடுத்த அதிரடி..!

By vinoth kumarFirst Published May 19, 2020, 6:49 PM IST
Highlights

அதிமுகவில் அனைத்து ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

அதிமுகவில் அனைத்து ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

அதிமுக கட்சியை பொறுத்த வரையில் மாவட்ட வாரியாக அமைப்பு ரீதியாக எத்தனை மாவட்டங்கள் இருக்கிறதோ அத்தனை மாவட்டத்திற்கும் தனித்தனியாக தகவல் தொழில்நுட்ப செயலாளர் மற்றும் மாநில அளவில் ஒரு தகவல் தொழில்நுட்ப செயலாளர் என பல்வேறு பொறுப்புகள் இருந்து வந்தது. தற்போது அந்த பொறுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை, வேலூர், கோவை, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் மற்றும் துணை நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, சென்னை, வேலூர், கோவை, மதுரை என நான்கு மண்டலங்காளப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலமும் ஒரு சில மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மண்டல செயலாளராக அஸ்பயர் கே. சுவாமிநாதனும், வேலூர் மண்டல செயலாளராக எம். கோவை சத்யனும், கோவை மண்டல  செயலாளராக சிங்கை ஜி. ராமச்சந்திரனும், மதுரை மண்டல செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யனும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!