அடுத்த வருஷத்துக்குள்ள அனைவருக்கும் அதிவேக இன்டர்நெட் !! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு !!

Published : Nov 13, 2019, 06:26 PM ISTUpdated : Nov 13, 2019, 07:12 PM IST
அடுத்த வருஷத்துக்குள்ள அனைவருக்கும் அதிவேக இன்டர்நெட் !!  முதலமைச்சர்  அதிரடி அறிவிப்பு !!

சுருக்கம்

அடுத்த  ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கேரளா மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

2017 ம் ஆண்டு செப்டம்பர்  மாதம், கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மொபைல் போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மீறியதால் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து அந்த மாணவி சார்பில் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது வாதிட்ட மனுதாரர், தன்னை போன்ற மாணவர்களுக்கு மொபைல் போன் பயன்படுத்துவது தொடர்பான அறிவு மறுக்கப்படுவதாக வாதிட்டார். இதனை ஏற்ற ஐகோர்ட், இன்டர்நெட் சேவை என்பது தனிநபர் உரிமை மற்றும் கல்வி உரிமை என தீர்ப்பளித்தது.


கோர்ட்டின் இந்த உத்தரவின்படி 2017 ம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான அரசும், இன்டர்நெட் சேவை தனிமனித உரிமை என அறிவித்தது. தற்போது பல வகைகளிலும் முன்னேறி உள்ள கேரள மாநிலத்தை இணைய தொழில்நட்பத்திலும் முன்னேற்றுவதற்காக K-FON என்ற தொழில்நுட்பத்தை உருவாக்க கேரள அமைச்சரவை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் கிராம, நகர்புற வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் அதிவேக இன்டர்நெட் பயன்படுத்த முடியும்.


கேரளாவில் சுமார் 20 குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களுக்கு இலவசமாக இந்த அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கப்பட உள்ளதாகவும், மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்திலேயே இந்த சேவை வழங்கப்பட உள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 

இந்த திட்டத்திற்காக ரூ.1548 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை கேரள உள்கட்டமைப்பு முதலீடு வாரியம், கேரள மின்துறை, ஐடி உள்கட்டமைப்பு துறை உள்ளிட்டகள் மூலம் பெறப்பட உள்ளது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்..

 

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!