“மதச்சார்பின்மைக்கு எதிராக போராடியவர் இந்திரா காந்தி ’’...100-வது பிறந்தநாள் விழாவில் சோனியா காந்தி புகழாரம்

First Published Nov 19, 2017, 8:18 PM IST
Highlights
Indira gandhi centuryfunction... sonia speech

நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, மதசார்பின்மைக்கு எதிராகவும், நாட்டை மதம், சாதி ரீதியாக பிளவுபடுத்துபவர்களுக்கு எதிராகவும் தீவிரமாகப் போராடினார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டினார்.

100-வது பிறந்தநாள்

நாட்டின் முதல் பெண் பிரதமரும், இரும்பு மங்கை எனக் கூறப்படும் இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாள் விழா நேற்று காங்கிரஸ் கட்சியினரால் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது.

மரியாதை

டெல்லியில் சப்தர்ஜங் பகுதியில் உள்ள இந்திரா காந்தியின் நினைவு இல்லத்துக்கு சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லிமுன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் சென்று மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

புகைப்படத் தொகுப்பு

அதன் பின், ‘இந்திரா காந்தியின் துணிச்சலான வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படத் தொகுப்பை சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், ஷீலா தீக்சித் ஆகியோர் வெளியிட்டனர்.

அதன்பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது -

போராடினார்

, நாட்டை மதம், சாதி ரீதியாக பிளவுபடுத்துபவர்களுக்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி தீவிரமாக போரிடினார். வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா என்பதையும், மதச்சார்பின்மை தன்மையையும், ஜனநாயக மான்புகளையும் இந்திரா போற்றினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒரே சமமாக பாவித்து நடத்தியவர் இந்திரா காந்தி. அவரைப் பொருத்தவரை மதம் ஒன்றுதான். இந்தியர்கள் அனைவரும் தேசத்தின் குழந்தைகள் என நம்பினார்.

தலைமைப்பண்பு

இந்திரா காந்தியின் தலைமைப் பண்புகளும், கொள்கைகளும் என் வாழ்க்கையை வழிநடத்தி வருகின்றன. இந்திரா காந்தி ஒருபோதும், தன்னுடைய சுய ஆதிக்கத்துக்காக போராடியது இல்லை. சுயலாபத்துக்கு எதிராகவே பணியாற்றியவர். நாட்டில் உள்ள ஏழை, விழிப்புநிலை மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது, அதைப் பெற்றுதரவும் நலனுக்காகவும்  போராடியவர்.

இரும்பு பெண்மணி

இரும்பு பெண்மணி என்று இந்திரா காந்தி அழைக்கப்படுவதை நான் கேட்டு இருக்கிறேன். இரும்பு என்பது அவரின் குணாதியங்களில் ஒரு கூறுதான், மற்ற வகையில் பெருந்தன்மை, மனிதநேயம் ஆகியவை அதிகாகக் கொண்டவர்.

மற்றவர்களை கொடுமைப்படுத்துவது, துன்புறுத்துவது, நியாயமின்மை, வற்புறுத்தல் ஆகியவற்றை ஒருபோதும் இந்திரா பொறுத்துக் கொண்டதில்லை. இதுதான் அவரின் அடிப்படை குணாதியசமாகும். இந்த குணம்தான் அவர் கலந்து கொண்ட, கையில் எடுத்த அனைத்து போராட்டங்களிலும் ஈர்க்கச் செய்ததது.

துணிச்சல் மிகுந்தவர்

16 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட இந்திரா காந்தி பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். ஏழ்மை, சமத்துவமின்மையை களைய போராடினார். தீவிரவாதத்துக்கு எதிராக போராடி, ஒரு போரையும் வழிநடத்தினார். தன் முன் இருந்த அனைத்து சவால்களையும் துணிச்சலாக எதிர்கொண்டார். நாட்டை வலிமையாக, ஒற்றுமையாக இருக்க வைக்க, செழிப்புடன் வைத்திருக்க  அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

click me!