9 தொகுதிகள் ஒதுக்கினால் தான் கூட்டணி …. குஜராத் தேர்தலில் காங்கிரசுக்கு செக் வைக்கும் ஹர்திக் பட்டேல் !!!

Asianet News Tamil  
Published : Nov 19, 2017, 07:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
9 தொகுதிகள் ஒதுக்கினால் தான் கூட்டணி …. குஜராத் தேர்தலில் காங்கிரசுக்கு செக் வைக்கும் ஹர்திக் பட்டேல் !!!

சுருக்கம்

congress alliance with hardik patel

குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ஹர்திக் பட்டேலின் பி.ஏ.ஏ.என். அமைப்பு தங்களுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கித் தர வேண்டம் என கோரிக்கை விடுத்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் ஹர்திக் பட்டேல் தலைமையில் பட்டேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் அங்கு ஹர்திக் பட்டேல் மிகவும் பிரபலம் ஆனார்.

தற்போது குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்  ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி செய்து வருகிறது. இதனால் பட்டேல் சமூகத்தினரை தங்களது பக்கம் இணைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க அந்த கட்சி முடிவு செய்தது. அந்த அமைப்பின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதாக காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.

தேர்தலில் ஹர்திக் பட்டேல் பி.ஏ.ஏ.என். கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இரு கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

ஹர்திக் பட்டேல் கட்சி 9 தொகுதிகளை காங்கிரசிடம் கேட்டுள்ளது. ஆனால் காங்கிரசோ 4 தொகுதிகளை மட்டுமே தர தயாராக இருக்கிறது. இதனால் இரு கட்சிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

மேலும் குஜராத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி முடிவு செய்ய அந்த அமைப்பு 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. ஏற்கனவே பல முறை கெடு விதித்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இந்த முறை காங்கிரஸ் முடிவு எடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?