நாட்டை விட்டு செல்கிறார் இந்தியாவின் NO 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி..!! லண்டனில் குடியேற 300 ஏக்கர் ரெடி.

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2021, 5:54 PM IST
Highlights

இந்நிலையில் அவரது மொத்த குடும்பமும் லண்டனுக்கு செல்வது கிட்டத்தட்ட  உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம். சமீபத்தில் பிரிட்டன் நாட்டில் பக்கிங்ஹாம் ஹையர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோன் பார்க் மாளிகையை 592 கோடி ரூபாய்க்கு அவர் வாங்கியுள்ளார். 

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனுக்கு குடிபெயர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் லண்டன் புறநகர் பகுதியில் ஸ்டோன் பார்க் என்ற பிரமாண்ட மாளிகையில் சுமார் 49 படுக்கை அறை வசதிகளுடன்கூடிய ஆடம்பர பங்களாவில் அவர் வசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் வெளிநாடுகளுக்கு தங்களது குடும்பத்தையும், அலுவலகத்தையும் இடம் மாற்றி வருகின்றனர். இன்னும் சிலர் இந்தியாவில் கடனை வாங்கிவிட்டு நாட்டைவிட்டே தப்பிய வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இவ்விரண்டுக்கும் சிறந்த உதாரணங்களை நாம் கூற  கூறமுடியும், அதேபோல சமீபத்தில் இந்தியாவின் மற்றொரு பணக்காரரும் வேக்சின் கிங் எனப்படும் ஆதார் பூனவல்லா தனது இல்லத்தை பிரிட்டனுக்கு மாற்றியுள்ளார். இந்த வரிசையில் இந்தியாவில் பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் வெளிநாடு (லண்டன்) செல்ல உள்ளார். முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்பதுடன், ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட அவரது சொத்துக்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள முதலீகள் இந்தியாவில் உள்ளது. இந்தியாவையும் தாண்டி பல நாடுகளில் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ள அவர் சர்வதேச பிசினஸ் மேக்னட் ஆக இருந்து வருகிறார். 

இந்நிலையில் உலகிலேயே விலை உயர்ந்த மும்பை வீடான ஆன்டாலியாவில் அவரது குடும்பம் வசித்து வரும் நிலையில் தற்போது லண்டனில் வசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை மிட் டே என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. ஆன்டலியாவில் அதிக பொருட்  செலவில் கட்டப்பட்டுள்ள வீட்டில் ஆண்டு காலம் வரை வாஸ்து காரணமாக குடியேறாமல் இருந்த அம்பானி குடும்பம், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்த வீட்டில் வசித்து வருகிறது. அதே நேரத்தில் அம்பானி இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை வைத்துள்ள நிலையில், லண்டனில் பாதி நேரம், மும்பையில் பாதி நேரம் தங்க அவரது குடும்பம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் சமீபத்தில் அவரது மும்பை வீட்டுக்கு வெளியே வெடிகுண்டு நிரப்பிய கார் திருத்தப்பட்ட சம்பவம் இந்த இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல கொரோனா உள்ளிட்ட காலத்திலும் அம்பானியின் குடும்பத்தினர்  ஆட்னலியா வீட்டிலேயே தங்கி இருந்தனர். high rise உயரமான கட்டிடத்தில் வசிப்பது போர் அடித்து விட்டதால் தரைதளத்தில் பரந்து விரிந்த வீட்டுக்கு செல்ல அவரது குடும்பம் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது மொத்த குடும்பமும் லண்டனுக்கு செல்வது கிட்டத்தட்ட  உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம். சமீபத்தில் பிரிட்டன் நாட்டில் பக்கிங்ஹாம் ஹையர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோன் பார்க் மாளிகையை 592 கோடி ரூபாய்க்கு அவர் வாங்கியுள்ளார். அந்த கட்டத்தில் 49 படுக்கையறைகள், பிரம்மாண்ட லிவிங் ஏறியா கூடிய வசதி அந்த மாளிகையில் உள்ளது. நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையை முகேஷ் அம்பானியின் குடும்பம் ஸ்டோன் பார்க் மாளிகையில் கொண்டாடியதாக தெரிகிறது. லண்டன் பக்கிங்ஹாம் ஹயர் ஸ்டோன் பார்க் இதற்கு முன்னர் ஆடம்பர ஹோட்டலாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அம்பானியின் குடும்பம் ஸ்டோன் பார்க்  மாளிகையில் குடியேற உள்ளனர். அங்கே பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டு வருவதுடன், அங்கு அவரது குடும்பத்திற்கான பிரத்யேக மினி ஹாஸ்பிட்டலும் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல் மாதத்தில் ஸ்டோன் பார்க் மாளிகைக்கு அவர்கள்  குடியேற உள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுவரை ரிலைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இருந்தோ அல்லது அம்பானி தரப்பில் இருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. 

ஸ்டோன் பார்க்கில் அமையவுள்ள ஹாஸ்பிட்டலில் பிரிட்டனில் உள்ள முன்னணி மருத்துவர் ஒருவரை தலைமை மருத்துவராக நியமிக்கப்பட உள்ளார். பிரிட்டனில் மருத்துவ சேவை சிறப்பாக உள்ளதால், அதிநவீன துடன் கூடிய வசதிகள் கொண்ட மினி ஹாஸ்பிடல் அங்கே உருவாக்கப்பட்டு வருகிறது. ஸ்டோன் பார்க் சிட்டிக்கு மிக தொலைவில் இருப்பதால் இந்த முடிவை அவரது குடும்பம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல அந்த வளாகத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு ராஜஸ்தானிலிருந்து வெள்ளை மார்பிள் கற்களால் செய்யப்பட்ட சிலைகள், கிருஷ்ணர் மற்றும் அனுமான் சிலைகளும் கொண்டு சென்று அங்கு பதிக்கப்பட உள்ளது. அந்த கோவிலுக்கு இந்தியாவில் இருந்து நிரந்தரமாக 2 பூசாரிகளையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக அம்பானியின் குடும்பத்தினர் மும்பை ஆன்டிலியா வில் தீபாவளி கொண்டாடுவது வழக்கம், ஆனால் முதல் முறை லண்டன் ஸ்டோன் பார்க் மாளிகையில் தீபாவளி கொண்டாடி உள்ளதை அடுத்து அவர்கள் ஸ்டோன் பார்க்கில் குடியேறுவது உறுதியாகியிருக்கிறது. 
 

click me!