பட்ஜெட் 2018 - இளைஞர்களுக்கு செம ஆஃபர் இருக்கு... அவையில் அதகளம் பண்ணவரும் அருண் ஜெட்லி....

First Published Jan 22, 2018, 5:54 PM IST
Highlights
Indias defence Budget 2018 More allocation fewer soldiers


2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் வெளிப்படைத்தன்மை, ரொக்கப் பண பரிவர்த்தனைக்கு கெடுபிடி, டிஜிட்டல் பொருளாதாரம், ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக் கட்டணம் ரத்து, உயர் கல்விக்கு நிதியுதவி, கிராமப்புற மேம்பாடு,தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், வேளாண் துறைக்கான அறிவிப்புகள் என பல்வேறு அம்சங்கள் நிரந்து காணப்பட்டது.

2017 - 18 மத்திய பட்ஜெட்டில் 10 முக்கிய கருப்பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்தார்.
1. விவசாயிகள் நலன் 2. கிராமப்புற மக்கள் நலன் 3. இளைஞர் மேம்பாடு 4. ஏழை, எளிய மக்களின் ஆரோக்கியத்தை பேணுதல் 5. உட்கட்டுமான மேம்பாடு 6. வலுவான நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதித்துறை 7. பொது சேவை 8. பொறுப்புகளை துரிதமாக செயல்படுத்துதல் 9. நேர்மையானவர்களுக்கு ஏற்ற வரிவிதிப்பு 10. விவேகமான நிதி மேலாண்மை ஆகிய 10 கருப்பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தாண்டுக்கான வருகிற பிப்ரவரி 1ஆம் தேதியில் 2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பான கடைசி பட்ஜெட் இது என்பதால் மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு அம்சங்கள் இப்பட்ஜெட்டில் இடம்பெறுமாம்.

கிராமப்புற மேம்பாடு மற்றும் விவசாயத்துக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருந்தது. அதைவிட முக்கியமாகக் குறைந்து வரும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவது தொடர்பான எதிர்பார்ப்புகள் இப்பட்ஜெட்டில் அதிகமாக இருக்கின்றன.

விவசாயம், உணவு பதப்படுத்துதல், பால் உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் வாயிலாக அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புத் திறன்கள் மெருகேற்றப்படும் எனவும் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் சுமார் 80 சதவிகிதம் வேலைவாய்ப்பு வழங்கலில் தீவிரமற்ற நிதிச் சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில்தான் இருக்கின்றன.

இந்நிலையில் வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வேலைவாய்ப்புகளைப் பெருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவித்து வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக இத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் ஆயத்தமாகியுள்ளது.

ஆகமொத்தத்தில் இது இந்த ஆட்சியில் நடக்கவிருக்கும் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் அவையில் அதகளம் பண்ணக் காத்திருக்கிறார் அருண் ஜெட்லி...

click me!