இந்தியாவின் பைகாட் சீனா முழக்கம் எடுபடவில்லை..!! மீண்டும் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் சீனா.

By Ezhilarasan BabuFirst Published Feb 24, 2021, 1:09 PM IST
Highlights

மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்கு அதிகரித்திருப்பது சீனாவிடம் இருந்து அதிகமான பொருட்கள் வாங்கியுள்ளோம் என்பதற்கான சான்றாக உள்ளது. ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியா மற்ற  நாடுகளிலிருந்து 16. 33 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளது. 

இந்தியா முழுவதும் சீன பொருட்களை புறக்கணிப்போம் பைகாட் சீனா, பை காட் சீனா என நம் தொண்டை தண்ணீர் வற்ற கத்தியும் அதனால் வணிக ரீதியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என தெரிவிக்கும் வகையில் சில அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. பைகாட் பைகாட் என்று நாம் கத்திக்கொண்டே இருந்தோம்..  ஆனால் சீனாவின் பங்கு 3 சதவீதம் உயர்ந்துள்ளது.  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அது உலக அளவில் மிகப்பெரிய வணிக நாடாக உருவெடுத்துள்ளது. 

இன்றிலிருந்து கடந்த எட்டு மாதங்கள் நாம் பின்னோக்கி திரும்பிப் பார்ப்போம்,  கடந்த ஜூன் 15, 16 இரவு லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன ராணுவத்துக்கு இடையே வன்முறை மோதல் வெடித்தது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 40 சீன வீரர்களும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.  அதைத்தொடர்ந்து சீனாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில byycottChineseproducts மற்றும boycottChina போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமடையத் தொடங்கின. 

சமூக ஊடகங்களில் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற இதுபோன்ற பிரச்சாரம் வெற்றி பெற்றதா.? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.  இதுதொடர்பாக வெளியாகி உள்ள புள்ளி விவரங்கள், சீனாவுக்கு எதிரான பிரச்சாரங்கள் கொஞ்சம்கூட எடுபடவில்லை என்று கூறுகின்றன.

நவம்பர் 2020 வரையிலான புள்ளி விவரங்கள் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன, அதில் 2020-21 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை இந்தியா  வெளிநாடுகளிலிருந்து வாங்கிய  பொருட்களில் 18% சீனாவில் இருந்து வந்துள்ளது. இவை ஏப்ரல் முதல் நவம்பர் 2019 வரையிலான புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது இதன் பங்கு சுமார் 15 சதவீதம் ஆகும். அதாவது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்கு வெறும் 8 மாதங்களில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த இறக்குமதி 28 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்த போதும் இது நடந்துள்ளது. 

மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்கு அதிகரித்திருப்பது சீனாவிடம் இருந்து அதிகமான பொருட்கள் வாங்கியுள்ளோம் என்பதற்கான சான்றாக உள்ளது. ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியா மற்ற  நாடுகளிலிருந்து 16. 33 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளது. இதில் 2. 89 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் சீனாவிலிருந்து பெறப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியா சுமார் 13 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 1 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட பொருட்கள் சீனாவுக்கு விற்கப்பட்டுள்ளன. 2011-2012 வரை ஐக்கிய அரபு எமிரேட் மிகப்பெரிய வர்த்தக நாடாக இருந்தது, ஆனால் அதை சீனா முறியடித்துள்ளது.  2011-2012 முதல் 2017-2018 வரை அமெரிக்கா நமது மிகப்பெரிய வர்த்தக நாடாக இருந்தது.

இருப்பினும் 2018-19 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு பதிலாக சீனாவும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மாறியது. இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடாக அமெரிக்கா இருந்தது, ஆனால் இப்போது சீனா மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. 2020-21 ஆம்  ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களின் இடையில் இந்தியா மற்றும் சீனா 3.95 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது, ஆனால் சீனாவுடன் வணிகம் செய்வதில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், நமது வர்த்தக இருப்பு அதனுடன் மிக அதிகமாக உள்ளதே ஆகும், அதாவது நாம் சீனாவிடமிருந்து அதிகமாக வாங்கியுள்ளோம், குறைவாகவே விற்பனை செய்துள்ளோம், சீனாவுடனான நமது வர்த்தக இருப்பு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 1.86 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது எனவும், புள்ளி 
விவரங்கள் கூறுகின்றன. 

 

click me!