திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்... கேட்ட தொகுதிகள் கிடைக்குமா..?

By Asianet TamilFirst Published Feb 28, 2021, 8:45 PM IST
Highlights

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 5 தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளது. 
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுகவில் பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
இதேப் போல திமுகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைத் தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் ஒரு சுற்றுபேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி குழுவுடன் திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களைச் சந்தித்தார். “திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. நாங்கள் 5 தொகுதிகள் கேட்டிருக்கிறோம். நாளை எங்களுக்கான தொகுதி நிலவரம் தெரிய வரும்” என்று காதர் மொய்தீன் தெரிவித்தார்.
 

click me!