
ஆர்கே நகர் இடைதேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது .இதனை தொடர்ந்து கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரச்சாரம் செய்வதற்கு நாளை மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில், ஆர் கே நகர் முழுவதும் மக்கள் நெரிசல் அதிகம் காணப்டுகிறது.
இந்நிலையில், பணபட்டுவாடா செய்ததாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தது.இது குறித்த அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. இது குறித்த தீவிர ஆலோசனை நடந்த பிறகு , தற்போது தேர்தல் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பணபட்டுவாடாவை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்தலை வரும் ஜூன் 4 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது