நிஜ ஹீரோ விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு பதவி உயர்வு...இந்திய விமானப்படை கவுரவம்..!

Published : Nov 03, 2021, 06:01 PM ISTUpdated : Nov 03, 2021, 06:08 PM IST
நிஜ ஹீரோ விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு பதவி உயர்வு...இந்திய விமானப்படை கவுரவம்..!

சுருக்கம்

குரூப் கேப்டன் இந்திய ராணுவத்தில் கர்னலுக்கு சமமானவர்.

இந்திய விமானப்படையின் ஏஸ் பைலட் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  குரூப் கேப்டன் இந்திய ராணுவத்தில் கர்னலுக்கு சமமானவர்.

விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் போர் விமானத்துடன் சண்டையில் ஈடுபட்டார். அப்போது பாகிஸ்தான் எல்லையில் F-16 போர் விமானத்தை வீழ்த்தி பாகிஸ்தான் படையினரிடம் சிக்கினார். F-16 போர் விமானத்தை வீழ்த்தியதற்காக அவருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

தற்போது இந்திய விமானப்படை மூலம் குரூப் கேப்டன் பதவி உயர்வு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப்பதவியை விரைவில் அவர் ஏற்றுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. 

குரூப் கேப்டன் இந்திய ராணுவத்தில் கர்னலுக்கு சமமானவர். அபிநந்தனின் MiG-21 போர் விமானம் F-16 ஐ வீழ்த்தி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) தரையிறங்கிய பிறகு சுட்டு வீழ்த்தப்பட்டது, அங்கு அவர் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் சர்வதேச தலையீடு மற்றும் இந்திய தரப்பின் விரிவான அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் இராணுவம் அவரை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அபிநந்தன் ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட 51 படைப்பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார்.பிப்ரவரி 27, 2019 அன்று பாகிஸ்தானியர்கள் நடத்திய வான்வழி தாக்குதலை முறியடிக்க பறந்தார்.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கைபர் பக்துன்க்வா பகுதியில் உள்ள பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம் மீது இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தியது. அபிநன்தன் தமிழகத்தை சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

இந்தியாவில் 2019 பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 40 வீரர்கள் மாண்டனர். இதற்குப் பதிலடியாக 2019 பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் புகுந்து பாலகோடு என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன. 

அந்த நடவடிக்கையின் போது இந்திய விமானப்படை போர் விமானியான அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானிடம் பிடிபட்டார். அவரை 2019 மார்ச் 1ஆம் தேதி இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் அதிகாரிகள் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இந்நிலையில், அபிநந்தனை விடுவிக்கவில்லை என்றால் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக தாக்கி இருக்கும். அதை உணர்ந்து கொண்டுதான் அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுவித்துவிட்டதாக அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சித் தலைவர் அயாஸ் சாதிக் குறிப்பிட்டார். 

“அபிநந்தன் பிடிபட்டதும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தலைமையில் அவரசக் கூட்டம் நடந்தது. “அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த குரேஷி, 2019 பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9 மணிக்கு பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தப்போவதாக நாடாளுமன்றத் தலைவர்களிடம் தெரிவித்தார். 

“இப்படி அவர் கூறியதைக் கேட்ட பாகிஸ்தான் ராணுவத் தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்வை கொட்டியது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் இம்ரான் கான் மறுத்துவிட்டார். “அபிநந்தனை போகவிடுங்கள் என்று வெளியுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டார். “அதனைத் தொடர்ந்துதான் அபிநந்தன் இந்தியாவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்,” என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அபிநந்தனுக்கு க்ரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!