மூன்று முக்கிய வட மாநிலங்களில் காங்கிரஸ் நிலை என்ன ? இந்தியா டி.வி.கருத்துக் கணிப்பு அதிர்ச்சி முடிவு !!

By Selvanayagam PFirst Published Apr 3, 2019, 8:51 PM IST
Highlights

பிரதமரை நிர்ணயிக்கும் முக்கிய மாநிலமாக கருதப்படும் உத்தர பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது குறித்து இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

17 ஆவது மக்களவைத் தேர்தல் வரும் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இந்நிலையில் நாடே எதிர்பார்க்கக்கூடிய உத்தரபிரதேச மாநில மக்களவைத் தேர்தல் முடிவுகள் உட்பட முக்கியமான சில மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் தற்போது  கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச வாக்காளர்கள் மன ஓட்டம் குறித்துதான் நாட்டு மக்கள் அதிகம் அக்கறைப்படுகிறார்கள். காரணம்.. இங்கு எந்த கட்சி அதிக தொகுதிகளை கைப்ற்றுகிறதோ அந்தக் கட்சிதான் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. எனவேதான், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என முக்கிய தலைவர்கள் உத்தர பிரதேசத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில்தான் இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் ஆகியவை இணைந்து, கருத்துக் கணிப்பு  ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. வழக்கம் போல் தற்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்த கருத்துக் கணிப்பு நடத்தபட்டது.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகபட்சமாக 46 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் அடங்கிய, மகாகட்பந்தன் கூட்டணிக்கு 2வது இடமும்,  காங்கிரசுக்கு வெறும், 4 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தை பொறுத்தளவில் மொத்தம், 42 தொகுதிகள் உள்ளன. அதில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 28 தொகுதிகளையும், பாஜக 12 தொகுதிகளையும் வெல்லக்கூடும் என்றும், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் தலா 1 தொகுதியில்தான் வெல்ல முடியும் என்று கருத்தக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல்  ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி, 14 மக்களவைத் தொகுதிகளை வெல்லும் என்றும்,  பாஜக கூட்டணி 6 தொகுதிகளையும்,  காங்கிரஸ் 1 தொகுதியையும் வெல்லும் என்றும் கருதுக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!