காஷ்மீர் மக்களை துப்பாக்கி இல்லாம சந்திப்போம் ! ஆனால் பாகிஸ்தானோட மோத எப்பவும் ரெடி ! பிபின் ராவத் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Aug 13, 2019, 10:12 PM IST
Highlights

காஷ்மீர் மக்களை துப்பாக்கி இல்லாமலேயே சந்திக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் வாலாட்டினால் எதற்கும் தயாராக இருப்பதாகவும் ராணுவ தளபதி பிபின் ராவத்,அதிரடியாக தெரிவித்தார்.
 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது மற்றும் 35ஏ  ஆகிய சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், அதேபோல் லடாக் பகுதியை பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் சட்டம்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
 
இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும்  நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக எதிர்ப்பு நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர்கள்  மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். 

இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய  ராணுவ தளபதி பிபின் ராவத், பாகிஸ்தானின் எந்த நடவடிக்கையையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளதாக தெரிவித்தார். 

முந்தைய காலங்களில், காஷ்மீர் மக்களுடன் ராணும் சுமூகமாக உரையாடியதாகவும், 70 மற்றும் 80-ம் ஆண்டுகளில் துப்பாக்கி இல்லாமல் மக்களைச் சந்தித்ததாகவும், வரும் காலங்களிலும் இது தொடரும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மாநில முதன்மை செயலர் ரோதிக் கன்சால் , காஷ்மீரில் முழு அமைதி நிலவுவதாக, அந்த காஷ்மீரில் அனைத்து சாலைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அதிகாரிகள் மற்றும் அனைத்து துறையினரும் விழிப்போடு  செயல்பட்டு வருவதாகவும் கூறினார். 

ஜம்மு, காஷ்மீர் மற்றும்  லடாக்கில் பக்ரீத் பண்டிகை அமைதியாக கொண்டாடப்பட்டதாகவும், சுதந்திர தினமும் உற்சாகமாக கொண்டாடப்படும் என்றும் கூறினார். 

click me!