சித்திரை 1 களத்திலிறங்கும் காலா...

By Asianet TamilFirst Published Aug 13, 2019, 9:20 PM IST
Highlights

தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை எந்த மூலைக்குச் சென்றாலும், எந்த தெருவுக்கு சென்றாலும் அங்கு  தம் கட்சி உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள ரஜினிகாந்த் அதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.

ரஜினி மக்கள் மன்றம் விரைவில் அரசியல் கட்சியாக உருவெடுக்க உள்ளது, அதற்கான அறிவிப்பு  தமிழ் புத்தாண்டான சித்திரை ஒன்றாம் தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடிகர் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து அரசியல் பணியை தொடங்கினார், இந்நிலையில்  அதிமுக திமுகவுக்கு இணையாக தன் கட்சியின் கட்டமைப்பும் வாய்ந்ததாக  இருக்க வேண்டும் என திட்டமிட்ட ரஜினிகாந்த் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கட்சியின் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டுவருகிறார்,

தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை எந்த மூலைக்குச் சென்றாலும், எந்த தெருவுக்கு சென்றாலும் அங்கு  தம் கட்சி உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள ரஜினிகாந்த் அதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.அவர் திட்டமிட்டதுபோல கிட்டத்தட்ட கட்சியின் கட்டமைப்பு  பணிகள் 90% நிறைவடைந்துள்ள நிலையில் கட்சியை அறிவித்து  முழுநேர அரசியலில் ரஜினி ஈடுபடஇருக்கிறார்.  

2021 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து கட்சி தொடங்கும் ரஜினி காந்த், தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை அறிவித்து அதைமக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.  கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுசாதாரண காரியம் இல்லை என்பதை உணர்ந்துள்ள ரஜினி, விரைந்து கட்சியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார் ரஜினிக்கு அரசியல் ஆலோசனை வழங்குபவர்கள் கொடுத்துள்ள அறிவுரையின்படி தமிழ் புத்தாண்டான சித்திரை 1 அன்று  அதிகாரப்பூர்வமாக தன் கட்சியை ரஜினி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரஜியின் கட்சி அறிவிப்பு தகவல் தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைக்க வைத்துள்ளது.
 

click me!