உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திய இந்தியா... குடியரசுத் தலைவர் பெருமிதம்..!

By vinoth kumarFirst Published Jan 29, 2021, 11:54 AM IST
Highlights

சவால்களை எதிர்கொண்டு இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் கூறியுள்ளார். 

சவால்களை எதிர்கொண்டு இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் கூறியுள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகையில்;- இந்த ஆண்டு இந்தியாவிற்கு முக்கியமானது. இந்த தொடர் மிகவும் முக்கியமானது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. சவால்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும், இந்தியாவை தடுத்து நிறுத்த முடியாது. 

எந்தவொரு சவாலும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது. இந்தியா உலகிற்கே தற்போது முன்னுதாரணமாக விளங்குகிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் பலர் பயனடைந்துள்ளனர். ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் மூலம் 6 மாநில மக்கள் பயனடைந்துள்ளனர். சுயசார்புடன் இருப்பதே இந்தியாவின் தற்போதைய தாரக மந்திரம். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீதும் அரசு கவனம் கொண்டுள்ளது. அரசு நடவடிக்கையால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது. கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டது. ஊரடங்கு காலத்தில் உணவிற்காக சிரமப்படும் நிலை யாருக்கும் ஏற்படவில்லை. 

மேலும், உயர்கல்வித்துறையில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை  எடுத்துள்ளது. வேளாண் விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இடையிலான ஒத்துழைப்பு, ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். 

click me!