நாட்டின் சிறந்த முதல்வர் யார்…? கரூர் எம்பி ஜோதிமணி போட்ட ‘தடாலடி’ டுவிட்டர்..

By manimegalai a  |  First Published Oct 19, 2021, 8:36 PM IST

இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் யார் என்று சர்வே ஒன்றை மேற்கோள் காட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.


சென்னை: இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் யார் என்று சர்வே ஒன்றை மேற்கோள் காட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.

Latest Videos

நாட்டின் சிறப்பாக முறையில் செயல்படும் முதலமைச்சர் யார் என்று ஐஏஎன்எஸ் – சிவோட்டர்ஸ் இணைந்து சர்வே நடத்தியது. அதன் முடிவுகளும் வெளியாகி இருக்கிறது.

இந்த முடிவுகள் பற்றி கரூர் எம்பி ஜோதிமணி தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

இந்தியாவில் மிகச்சிறப்பாக செயல்படும் முதலமைச்சர்- சத்தீஷ்கர் காங்கிரஸ் முதலமைச்சர் திரு.பூபேஷ்பகேல் அவர்கள்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் நக்சல்கள் கொடூரமாக படுகொலைசெய்தனர். அதை பாஜக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அடுத்து யார் ? என்ற கேள்வி எழுந்த போது சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்ததுபோல் எழுந்தவர்தான் பூபேஷ்பகல்.

அடுத்த தேர்தலில் பாஜகவை உருத்தெரியாமல் ஆக்கினார். இன்றுவரை ஆர் எஸ் எஸ் / பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர். முதலமைச்சர் ஆனபிறகு 15 ஆண்டுகாலம் பாஜகவால் சிதைக்கப்பட்ட மாநிலத்தில், ஆட்சியையும் திறம்பட நடத்திக்கொண்டு,கட்சிக்காக ஓடி ஓடி உழைப்பவர். அவரது சிறப்பான பணி தொடரட்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். 

𝗜𝗔𝗡𝗦-𝗖𝗩𝗼𝘁𝗲𝗿 𝗚𝗼𝘃𝗲𝗿𝗻𝗮𝗻𝗰𝗲 𝗜𝗻𝗱𝗲𝘅

Which Chief Minister are you least angry with? pic.twitter.com/bJnIWNLWTe

— IANS Tweets (@ians_india)
click me!