மதுரையில் 2031ல் ஜோசப் விஜய் எனும் நான் என்ற தலைப்பில் விஜய் ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் அரசியல் சூட்டை கிளப்பி இருக்கிறது.
மதுரை: மதுரையில் 2031ல் ஜோசப் விஜய் எனும் நான் என்ற தலைப்பில் விஜய் ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் அரசியல் சூட்டை கிளப்பி இருக்கிறது.
தமிழகத்தில் போஸ்டர் கலாச்சாரத்துக்கு என்றுமே பஞ்சம் இருந்தது இல்லை… சொல்ல வந்ததை சுருக்கமாக நச்சென்று வெளிக்காட்டுவதில் போஸ்டருக்கு ஈடு, இணை ஏதும் இல்லை.
சில போஸ்டர்கள் கண்டு கொள்ளப்படாமல் போய்விடும். சில போஸ்டர்கள் கண்களை உறுத்தும். அப்படி அரசியல் கட்சிகளின் கண்களை உறுத்த ஆரம்பித்து இருக்கிறது விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்.
மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை ஒட்டி இருக்கின்றனர். அந்த போஸ்டரில் உள்ள வாசகங்கள் இதுதான்….
பதவியேற்பு… 2031ல் ஜோசப் விஜய் எனும் நான்…. உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறப்பட்டு உள்ளது.
இது தவிர உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்டு 110 பேர் வாகை சூடி உள்ளனர். அந்த எண்ணிக்கையும் குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
அனைத்துக்கும் மேலாக 2021 உள்ளாட்சி நல்ல தேர்வு…. நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு…. என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர்கள் தான் இப்போது மதுரையில் அரசியல் கட்சிகளிடையே பெரும் விமர்சனத்துக்கு வழி வகுத்துள்ளது.