கொரோனா பரவல் அதிகரிப்பு.. மாணவர்கள் நலன்கருதி விடுமுறையளிக்க வேண்டும்- கதறும் ஆசிரியர்கள் சங்கம்.

Published : Mar 15, 2021, 11:13 AM IST
கொரோனா பரவல் அதிகரிப்பு.. மாணவர்கள் நலன்கருதி விடுமுறையளிக்க வேண்டும்- கதறும் ஆசிரியர்கள் சங்கம்.

சுருக்கம்

கொரோனா பரவல் அதிகரிப்புகாரணமாக, மாணவர்கள் நலன்கருதி தேர்ச்சியளிக்கப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறையளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தில் மாநிலத்தலைவர் பி.கே. இளமாறன் விடுத்துள்ள  அறிக்கை, 

கொரோனா பரவல் அதிகரிப்புகாரணமாக, மாணவர்கள் நலன்கருதி தேர்ச்சியளிக்கப்பட்ட  மாணவர்களுக்கு விடுமுறையளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இது குறித்து அச்சங்கத்தில் மாநிலத்தலைவர் பி.கே. இளமாறன் விடுத்துள்ள 
அறிக்கை, கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கமாகியிருந்த நிலையில் நேரிடை பயிற்சியே முழுமையாகும் என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த ஜனவரி முதல் 9,10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.  இந்நிலையில் மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி  என்ற அறிவிப்பினை தமிழக அரசு அறிவித்ததை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. 

இருப்பினும் மாணவர்களின் கற்றல் தடையில்லாமல் நடைபெறும் வகையில் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது என்று சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளில்  மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வருவது வேதனையளிக்கிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் மேலும் ஏற்கனவே தேர்ச்சியளிக்கப்பட்ட 9,10,11 வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வருவதால் பொதுத்தேர்வை எழுதவுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்களும் பள்ளியினைவிட்டு செல்லும்போது போதிய சமூக இடைவெளி கடைபிடிப்பது கேள்விக்குறியாக உள்ளது. 

இதனால் கொரோனா தாக்கி பொதுத்தேர்வு எழுதவுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளமுடியுமா எனப் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளார்கள். ஆகையால் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில்  ஏற்னவே தேர்ச்சியளிக்கப்பட்ட 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  விடுமுறையளித்து பொதுத்தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்தவும் 12 ஆம் வகுப்பெடுக்கும் ஆசிரியர்களை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கவும் ஆவனசெய்யும்படி தமிழக அரசினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்தி பணிவுடன் வேண்டுகின்றேன். 

 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!