எப்படிப் பணப்பட்டுவாடா செய்வோம்..? திமுக, அதிமுக பிரமுகர்களை அச்சுறுத்தும் ரெய்டு!

By Asianet TamilFirst Published Apr 2, 2019, 10:30 AM IST
Highlights

மக்களவைத் தேர்தலில் தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில்  வருமான வரித் துறை எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கண்டு திமுக மட்டுமல்ல அதிமுகவினரும் கலக்கத்தில் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ளாட்சித் துறையில் ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்துவரும் கான்ட்ராக்டர் சபேசன் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அந்தச் சோதனியில் கணக்கில் வராத 15 கோடி ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர். கான்ட்ராக்டர் சபேசன் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் பினாமி எனக் கூறப்படுகிறது. இந்தச் சோதனையில்போது கைப்பற்றப்பட்ட டைரியில் யார் யாருக்கு பணம் வழங்கப்பட்டது என்ற விபரம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சோதனை ஆளும் அதிமுகவை கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில் கட்சியினரிடம் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றது. முதல் கட்ட சோதனையில் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. வெறும் 10 லட்சம் பிடிபட்டதால், பாஜகவின் வழிகாட்டுதலில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக திமுக கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் முதல் கட்ட சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் நேற்று வேலூரில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்படுன் நபர்களின் இடங்களில் நடந்த சோதனை 11.53 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவையும் திமுகவையும் ஒரு சேர கலக்கத்தில் ஆழ்த்தும் வகையில் இந்தச் சோதனைகள் நடந்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் சோதனைக்கு செல்லும்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். உள்ளூர் போலீஸ் பாதுகாப்புக்கு சென்றால், அந்தத் தகவல் எப்படியும் போலீஸ் முலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றுவிடும் என்பதால் செல்வதால், உள்ளூர் போலீஸை அழைத்து செல்வதை வருமான வரித்துறையும் தேர்தல் ஆணையமும் தவிர்க்கிறது. இதன் காரணமாக ரெய்டுக்கு வரும் தகவல்  அரசியல்வாதிகளுக்கு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தேர்தலில் பணப்பட்டுவாடாவை எப்படி மேற்கொள்ளப் போகிறோம் என்பதில் இரு கட்சி பிரமுகர்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 
 

click me!