
உலக சுகாதாரத்தினமான இன்று, தமிழ் நாட்டில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இன்று காலை 6 மணி முதல் தொடங்கிய சோதனை, தொடர்ந்து நடை பெற்று வருகிறது .
சென்னை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள கல்லூரிகளி லும் கல்குவாரி உள்ளிட்ட இடங்களிலும் வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .
திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில், உலக சுகாதார தினமான இன்று சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், எப்படியோ வீட்டை விட்டு வெளியே வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் சரத்குமாருக்கு எவ்வளவு கொடுத்த ... எவ்வளவு கொடுத்த என, தன்னிடம் வருமானவரித்துறை கேள்வி கேட்டே நச்சரித்ததாக அவர் தெரிவித்தார்.
எதற்காக நான் சரத்குமாருக்கு பணம் தர வேண்டும், சரத் குமார் எதற்கு என்னிடம் பணம் பெற வேண்டும் ? என தொடர்ந்து விஜயபாஸ்கர், வருமானவரைத்துரையினர் மீது குற்றம் சாட்டினார்.