முதலில் துரைமுருகன்! தற்போது எ.வ வேலு! வருமான வரித்துறை அதிரடி!

By Selva KathirFirst Published Apr 10, 2019, 11:32 AM IST
Highlights

தர்மபுரி மாவட்டம் அரூரில் பேருந்து ஒன்றில் கேட்பாரற்று சுமார் மூன்றரை கோடி ரூபாய் சிக்கி விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ வேலுவுக்கு தொடர்பு இருப்பதாக வருமானவரித்துறை சந்தித்துள்ளது.
 

தர்மபுரி மாவட்டம் அரூரில் பேருந்து ஒன்றில் கேட்பாரற்று சுமார் மூன்றரை கோடி ரூபாய் சிக்கி விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ வேலுவுக்கு தொடர்பு இருப்பதாக வருமானவரித்துறை சந்தித்துள்ளது.

கடந்த வாரம் திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற அரசுப் பேருந்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பேருந்தின் இருக்கை ஒன்றுக்கு அடியில் சிறிய கைப்பையில் வைத்து கட்டுகட்டாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் கடத்தப்பட்டது. அந்தப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றிய போது அது தங்களுக்கு உரியது அல்ல என்று பேருந்தில் இருந்த அனைவரும் கூறினர்.

இருப்பினும் அந்த இருக்கையில் அமர்ந்திருந்த செல்வராஜ் என்ற நபரை விசாரித்தபோது அவர் திமுக தொழிற்சங்கமான தொமுசவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் அந்தப் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் திமுகவின் தொமுச தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து செல்வராஜ் என்கிற அந்த நபரை போலீசார் விசாரித்த போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இருந்தாலும் கூட தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் அந்த மூன்றரை கோடி ரூபாய் பணத்தை செல்வராஜ் தான் பேருந்தில் வைத்து எடுத்துச் சென்றார் என்பது உறுதியானது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் அந்த பணத்தை செல்வராஜிடம் கொடுத்து அரூருக்கு அனுப்பி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று செல்வராஜ் மற்றும் அந்த நகைக்கடை அதிபர் அழைத்து வருமான வரித்துறையினர் தேர்தல் பறக்கும் படையினரும் துருவி துருவி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது இருவரும் நேரடியாக எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அந்த மூன்றரை கோடி ரூபாய் பணம் திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வேலுவுக்கு சொந்தமானதுதான் என்று வருமான வரித்துறையினர் நம்புவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் ஆதாரங்களும் கிடைத்து உள்ளதாகக் கூறுகிறார்கள்.

இதனையடுத்து விரைவில் வேலுவை விசாரணைக்கு வருமாறு வருமான வரித் துறை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற இந்த சம்பவங்கள் காரணமாக தேர்தல் பணிகள் எதிலும் ஈடுபடாமல் வேலு வீட்டிலேயே முடங்கி கிடந்தார் என்றும் சொல்லப்படுகிறது. துரைமுருகன் விவகாரத்தால் ஏற்பட்ட டென்ஷனே ஸ்டாலினுக்கு அடங்காத நிலையில் வேலு விவகாரத்தால் அவர் மேலும் டென்சன் ஆகி உள்ளார்.

click me!