தொடருது … தொடருது …4 ஆவது நாளாக சோதனை !! இன்றும் 30 இடங்களில் குடைந்தெடுக்கும் வருமான வரித்துறையினர் !!!

Asianet News Tamil  
Published : Nov 12, 2017, 07:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
தொடருது … தொடருது …4 ஆவது நாளாக சோதனை !! இன்றும் 30 இடங்களில் குடைந்தெடுக்கும் வருமான வரித்துறையினர் !!!

சுருக்கம்

income tax rain continue 4th day

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 4 ஆவது நாளாக இன்றும் சோதனை தொடர்ந்து வருகிறது. இன்றும் 30 இடங்களில் சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மொத்தம் 187 இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் பல கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், நகைகள், வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயா தொலைக்காட்சி சிஇஓ விவேக் ஜெயராமன் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் 20 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் ஆவணங்கள் கைப்பற்றதுடன், அது  தொடர்பான  100 வங்கிக் கணக்குக்குகள் முடக்கப்பட்டுள்ளன,

இந்நிலையில் 4வது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது. ஜெயா டி.வி., அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை, கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடந்து வருவதாக ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .

 

PREV
click me!

Recommended Stories

5 ஆண்டுகால உழைப்பெல்லாம் வீண்..! அப்செட்டில் திமுகவினர்..! புலம்ப வைத்த அதிமுக ஓடுகாலிகள்..!
கொங்கில் டான் செந்தில் பாலாஜியா..? எஸ்.பி.வேலுமணியா..? 30 தொகுதிகளில் முரட்டு மோதல்..!