கடும் கட்டுப்பாடு விதித்தும் கசிந்ததா ரகசியம் ? போலீசார் ஒத்துழைப்புத் தராததால் வருமான வரித்துறையினர் அதிர்ச்சி !!!

Asianet News Tamil  
Published : Nov 11, 2017, 10:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
கடும் கட்டுப்பாடு விதித்தும் கசிந்ததா ரகசியம் ? போலீசார் ஒத்துழைப்புத் தராததால் வருமான வரித்துறையினர் அதிர்ச்சி !!!

சுருக்கம்

income tax raid secrecy

சசிகலா தரப்பினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தப் போகும் ரெய்டு குறித்து சிறிதளவு கூட ரகசியம் கசியக் கூடாது என டெல்லி தலைமை கடும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தும், எப்படியோ, தினகரன் தரப்புக்கு தெரிந்துவிட்டது என்றும்,.ஒரு சில இடங்களில், போலீசார் முறையாக ஒத்துழைக்க வில்லை என்பதால் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ் வீட்டில் சோதனைக்கு போன போது, மத்திய படையுடன் சென்ற வரித்துறையினர், தமிழகம் முழுவதும், சசிகலா தரப்பினரிடம் சோதனை நடத்துவதற்கு, போலீஸ் பாதுகாப்பை தான் நாடினர்.

மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழ்நாடு முழுவதும் நடக்கும் சோதனைக்கு, தேவையான மத்திய வீரர்களை பெறுவதற்கு, கால அவகாசம் கிடைக்காததால், தமிழக போலீசாரின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது.

ரெய்டுக்காக தயார் செய்யப்பட்ட கார்கள் கூட ஒரு பெரும்புள்ளியின் வீட்டு திருமணத்துக்கு என்று கூறித்தான் பதிவு செய்திருக்கிறார்கள். ரகசியம் பாதுகக்கப்பட வேண்டும் என வருமான வரித்துறையினர் கடும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தும் எப்படியோ, தினகரன் தரப்புக்கு ரகசியம் கசிந்துள்ளது என கூறப்படுகிறது.

இதையடுத்த ஒரு சில இடங்களில், போலீசார் முறையாக ஒத்துழைக்க வில்லை என்பதால் வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும், ஒரு சில வீடுகளில் கணக்கில் காட்டப்படாத பணம், தங்க நகைகள் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக எந்தத் தகவலும் வெளியாகாமல் இருக்கும் வகையில் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் குந்த ஜாக்கிரதையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!