IT Raid: ஆளுங்கட்சியை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை. அதிர்ச்சியில் திமுக.!

Published : Mar 02, 2022, 10:12 AM IST
IT Raid: ஆளுங்கட்சியை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை. அதிர்ச்சியில் திமுக.!

சுருக்கம்

ஆற்காட்டில் திமுகவை சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி.சாரதியின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆற்காட்டில் திமுகவை சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி.சாரதியின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர்  ஏ.வி.சாரதி. இவர் கடந்த அதிமுக ஆட்சியின் போது மாவட்ட வர்த்தக அணி பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு சொந்ததமான ஆற்காடு பகுதியில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். குறிப்பாக சிமெண்ட் ஏஜென்சி மற்றும் பெரிய கல்குவாரியும் செயல்பட்டு  வருகிறது. 

தற்போது 4 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அவருடைய வீடு, அலுவலகங்கள், கல்குவாரி பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆளுங்கட்சியை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் சோதனை நடைபெறுவதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்வு காரணமாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!