சிக்கிய பல கோடி ரூபாயால் பதற்றம்... உயர்நீதிமன்றத்தை நாடிய கதிர் ஆனந்த்... துரைமுருகனுக்கு வந்த சோதனை...!

Published : Apr 01, 2019, 11:42 AM IST
சிக்கிய பல கோடி ரூபாயால் பதற்றம்... உயர்நீதிமன்றத்தை நாடிய கதிர் ஆனந்த்... துரைமுருகனுக்கு வந்த சோதனை...!

சுருக்கம்

சோதனை நடத்தி பிரச்சாரத்தை தடுப்பதாக வருமான வரித்துறையினர் மீது திமுக பொருளாளர் துரை முருகனும், அவரது மகனும் வேலூர் தொகுதி மக்களவை திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.   

சோதனை நடத்தி பிரச்சாரத்தை தடுப்பதாக வருமான வரித்துறையினர் மீது திமுக பொருளாளர் துரை முருகனும், அவரது மகனும் வேலூர் தொகுதி மக்களவை திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.   

கடந்த மார்ச் 30ம் தேதி திமுக பொருளாளா் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடுவது சில மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டு துரைமுருகன் ஆதரவாளர்கள் வாக்குவாதம் நடத்தியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வருமான வரித்துறையினர் வேலூா் மாவட்டத்தின் பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு, கட்டுக்கட்டாக மூட்டைகளில், அட்டைபெட்டிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு மூட்டையிலும், வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டுவாரியாக வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய பணம் தொடர்பாக அதில் குறிப்பு எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த பணம் ரூ.10 கோடி இருக்கும் எனக் கருதப்படுகிறது. 5 இயந்திரங்களை வைத்து பணத்தை என்னூம் பணிகள் காலை 8 மணி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

இந்நிலையில் இந்தப்பணம் கண்டெடுக்கப்பட்ட சிமெண்ட் குடோன் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது என வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் துரைமுருகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அத்தோடு வஞ்சூர் திமுக ஊராட்சி செயலாளர் பெருமாள் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறனர்.  
 

PREV
click me!

Recommended Stories

ஒரு அரசன் வருவான்..! கிறிஸ்துமஸ் விழாவில் கடவுள் நம்பிக்கை..! திமுகவால் சுதாரித்த விஜய்..!
திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!