கிடுக்கிப் பிடியில் கே.என்.நேரு…. 15 மணி நேரமாக குடைந்தெடுக்கும் வருமான வரித்துறை !!

 
Published : Jan 31, 2018, 08:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
கிடுக்கிப் பிடியில் கே.என்.நேரு…. 15 மணி நேரமாக குடைந்தெடுக்கும் வருமான வரித்துறை !!

சுருக்கம்

Income tax raid in K.N.Nehru rice mill trichy

திருச்சி அருகே முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான அரிசி ஆலையில் தொடர்ந்து 15 மணி நேரமாக வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்

திருச்சி மாவட்டம்  லால்குடி அருகேயுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான அரிசி ஆலையில்  நேற்று பிற்பகலில் திடீரென புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள்  அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

திருச்சியை அடுத்த லால்குடி நெடுஞ்சாலையில் உள்ள பூவாளுர் கிராமத்தில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று  பிற்பகலில் 3 கார்களில் வந்த 6 பேர் கொண்ட, வருமான வரித்துறை குழுவினர் அரிசி ஆலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பணமதிப்புழப்பு நடவடிக்கையின்போது இந்த அரிசி ஆலை மூலம் பணம் மாற்றப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு