பட்டாக்கத்திகளுடன் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் !! பீதியில் அலறியடித்து ஓடிய பயணிகள் !!

 
Published : Jan 31, 2018, 07:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
பட்டாக்கத்திகளுடன் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் !! பீதியில் அலறியடித்து ஓடிய பயணிகள் !!

சுருக்கம்

students in pattaravakkam with Knife

திருவள்ளூர் மாவட்டம் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் பட்டாகத்தி மற்றும் அரிவாள்களுடன் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள், 3 சாணவர்களை விரட்டி, விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் கத்திகளை சுழற்றியபடியே ஓடியதால் அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி பல்வேறு ரெயில் நிலையங்களுக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன். இந்த நிலையில் நேற்று சென்னை  சென்ட்ரலில் இருந்து அம்பத்தூர் வழியாக சென்ற மின்சார ரெயிலில் மாணவர்கள் பயணம் செய்தனர்.

அப்போது கொரட்டூர் - அம்பத்தூர் இடையே பட்டரவாக்கம் ரெயில் நிலையம் வந்தபோது மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. சுமார் 15 மாணவர்கள் கத்தி, அரிவாள்களுடன் சென்று 3 மாணவர்களை ஓட, ஓட விரட்டி வெட்டினர். இதனை கண்ட பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும், அந்த மாணவர்கள் பயணிகள் மீதும் கற்களை எறிந்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அம்பத்தூர் காவல்  துறையினர்  வழக்கு பதிவு செய்து 3 மாணவர்களை கைத செய்தனர். அவர்களிடம் இருந்து 10 க்கும் மேற்பட்ட கத்திகள் மற்றும் அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அண்மையில்  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள்களுடன் ரெயிலில் பயணம் செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு