’நாங்களும் சோதனை நடத்துவோம்ல’ - வருமான வரித்துறைக்கே அதிரடி காட்டிய டிடிவி ஆதரவாளர்கள்...!

Asianet News Tamil  
Published : Nov 09, 2017, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
’நாங்களும் சோதனை நடத்துவோம்ல’ - வருமான வரித்துறைக்கே அதிரடி காட்டிய டிடிவி ஆதரவாளர்கள்...!

சுருக்கம்

Income Tax officials are conducting searches at 187 places including Dinakarans house.

டிடிவி தினகரன் வீடு உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வாங்கி சென்ற உணவில் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என டிடிவி ஆதரவாளர்கள் சோதனை நடத்தி உள்ளே அனுமதித்தனர். 

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சசிகலாவின் உறவினர்கள் அனைவரது வீடுகளும் சோதனைக்கு ஆளாகியுள்ளது. 

ஐதராபாத் கொச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 6 ஆணையர்கள் ரெய்டுக்கு வருகை தந்துள்ளனர். சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை ஊழியர்கள் 1,800 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தனது பண்ணை வீட்டில் சோதனை நடப்பதாகவும் ஆனால் அங்கு உர மூட்டையை தவிர வேறொன்றும் இல்லை எனவும் தெரிவித்தார். 

மேலும் அதிகாரிகளே அங்கு எதையாவது வைத்துவிட்டு முறைகேடான விஷயத்தை கண்டறிந்துவிட்டோம் என கூறினால்தான் உண்டு என்றார். 

இதையடுத்து சோதனையில் ஈடுபட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வாங்கி செல்லப்பட்ட உணவுகளை, வீட்டுக்கு வெளியில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் சோதனை செய்தனர். 

உணவு பொட்டலங்களோடு அதிகாரிகள் தேவையில்லாத ஆவணங்கள் எதையாவது சேர்த்து வீட்டினுள் வைத்து விடலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தினகரன் ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

 

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!