விஜயபாஸ்கர் மனைவிக்கு சம்மன் - வருமானவரித்துறை அதிரடி!!!

Asianet News Tamil  
Published : May 03, 2017, 01:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
விஜயபாஸ்கர் மனைவிக்கு சம்மன் - வருமானவரித்துறை அதிரடி!!!

சுருக்கம்

income tax department summon to vijayabaskar wife

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிற்கு  இன்று பிற்பகல் 2:30 க்குள்  விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். 

கடந்த மாதம் 7 ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டாகடர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, சமக தலைவர் சரத்குமார் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

அந்த சோதனையில் பல்வேறு முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த அதிரடி சோதனையில் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ. 89 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணமும் கைப்பற்றப்பட்டது.

அதனை அடுத்து 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர். தொடர்ந்து விஜயபாஸ்கர் கடந்த 7 ம் தேதி அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர். 

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, மேலும் சந்தேகங்கள் இருப்பதாகவும் அதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிற்கு  இன்று பிற்பகல் 2:30 க்குள்  விசாரனைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு வேண்டும் என்றும் வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!