
சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான இடங்களில் ரூ.7 கோடி, ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கமும் ரூ.1,430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் என பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை 6 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் முக்கியமாக ஜெயா டிவி சிஇஓ விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, சகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான இடங்களில் ரூ.7 கோடி, ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கமும் ரூ.1,430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஆனால் சசிகலாவின் பினாமிகள் வெளியாட்களாக இருப்பதால் அவர்கள் யார் என்பதை தற்போதைய சூழலில் கண்டறிவது சிரமம் என்றும் உறுதிப்படுத்த விரிவான விசாரணை நடக்கிறது என்றும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.