எங்களுக்கு ஒன்னும் தெரியாதுங்க...! ஜகா வாங்கும் போயஸ்கார்டன் போலீஸ்...!

First Published Nov 17, 2017, 10:26 PM IST
Highlights
Income tax department for Boisgarden


போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு ஏராளமான மாநகர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சோதனை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் வழக்கமான பாதுகாப்புக்காகவே தாங்கள் வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். 

கடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் என பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனை 6 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதில் முக்கியமாக ஜெயா டிவி சிஇஓ விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, சகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். 

இதில் சற்று நேரத்திற்கு முன்பு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன இரண்டாவது முறையாக வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். 

இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் கார்டன் இல்லத்திலும் உதவியாளர் பூங்குன்றன் அறையிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் போயஸ்கார்டன் இல்லத்தில் வழக்கத்திற்கு அதிகமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் உதவியுடன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனரா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. 

ஆனால் இதுகுறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் வழக்கமான பாதுகாப்புக்காகவே தாங்கள் வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். 

click me!