100 ஆண்டுகளுக்கு இருக்கும் கௌரமான சின்னம்.. இதில் எந்த அரசியலும் இல்லை.. எதிர்க்கட்சிகள் புறக்கணிக்காதீங்க..!

By vinoth kumar  |  First Published May 25, 2023, 12:19 PM IST

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தொழிலாளர்களும் மரியாதை செய்யப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 20 ஆதீனங்களை வரவழைத்து செங்கோல் நிறுவப்படவுள்ளது. திருவாவடுதுறை, தர்மபுரி, மதுரை, அவிநாசி பழனி தூத்துக்குடி உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. 


செங்கோலை வடிவமைத்த உம்மிடி சகோதரர்களை பிரதமர் கவுரவிக்க உள்ளார். திருவாவடுதுறை, தருமபுர, மதுரை உள்பட 20 ஆதீனங்கள் பங்கேற்கிறார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், டெல்லியில் வரும் 28ம் தேதி திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்தும், அங்கு நிறுவப்படவுள்ள செங்கோல் குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர் சேகர்பாபு உள்ளிடோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

Latest Videos

அப்போது, பேசிய நிர்மலா சீத்தாராமன்;- புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கவுள்ளார். அன்றைய தினம் முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளது. செங்கோலை வடிவமைத்த உம்மிடி சகோதரர்களை பிரதமர் கவுரவிக்கவுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தொழிலாளர்களும் மரியாதை செய்யப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 20 ஆதீனங்களை வரவழைத்து செங்கோல் நிறுவப்படவுள்ளது. திருவாவடுதுறை, தர்மபுரி, மதுரை, அவிநாசி பழனி தூத்துக்குடி உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் வைக்கப்படும். ஆட்சி மாற்றத்தை குறிக்க செங்கோலை பரிமாற்றம் செய்யும் நடைமுறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதை குறிக்கிறது செங்கோல் பரிமாற்றம். குடியரசுத் தலைவர் முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று நாடாளுமன்றத்தை அவர் தான் திறக்க வேண்டும் என கோருகிறார்கள். மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு முறையான அழைப்பு விடுத்துள்ளனர் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

புதிய நாடாளுமன்ற கட்டிடம் அடுத்த 100 ஆண்டுகளுக்கு இருக்கும் கௌரமான சின்னம். நாடாளுமன்றம் என்ற ஜனநாயக கோயிலின் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்ககூடாது. எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை என  நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேட்டி
 

தெலுங்கானா மாநிலத்தில் புதிய தலைமைச் செயலக கட்டடத்தை முதலமைச்தர்தான் திறந்த வைத்தார் , மாநில ஆளுநரனா எனக்கு அழைப்பு கூட கொடுக்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் போலவே ஆளுநர்களும் அரசியல் சார்பு இல்லாதவர்தான் என யாரும் கூறுவதில்லையே, ஏன்..? என கூறினார்.

click me!