இந்த குறிப்பிட்ட வாக்குச் சாவடியில், வரும் சனிக்கிழமை மறு வாக்குப் பதிவு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Apr 14, 2021, 2:18 PM IST
Highlights

மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 58 (1)b யின் கீழ், வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டிஏவி பப்ளிக் பள்ளி முகவரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி என் 98ல் மறுவாக்குப்பதிவு 17-4- 2021 சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பைக்கில் எடுத்துச்சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்: இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த 6-4-2021 அன்று வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  டிஏவி பப்ளிக் பள்ளியில்  அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லத்தக்கதல்ல என்று அறிவித்துள்ளது. 

மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 58 (1)b யின் கீழ், வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டிஏவி பப்ளிக் பள்ளி முகவரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி என் 98ல் மறுவாக்குப்பதிவு 17-4- 2021 சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மேற்படி வாக்குச்சாவடியில் 17- 4- 2021 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மேலும் இவ் வாக்குச்சாவடி ஆனது ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி என்பதால், இந்த மறுவாக்குப்பதிவு மேற்படி வாக்குச்சாவடி எண் 92 குட்பட்ட 548 ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

வாக்குப்பதிவின் போது வாக்களிக்கும் நபர்களின் இடது கை விரலில் அழியா மை வைக்கப்படும் எனவும், இந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் 80 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோரில் ஏற்கனவே தபால் ஓட்டு அளித்தவர்களுக்கும், அளிக்க இருப்பவர்களும் நேரில் சென்று வாக்களிக்க இயலாது எனவும்  தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ்  தெரிவித்துள்ளார். 

 

click me!