#BREAKING திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா.. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.. அதிர்ச்சியில் ஸ்டாலின்

Published : Apr 14, 2021, 02:17 PM IST
#BREAKING திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா.. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.. அதிர்ச்சியில் ஸ்டாலின்

சுருக்கம்

திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புத்தூர் எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புத்தூர் எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7000ஐ நெருங்கி உள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் திமுக எம்.பி. கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புத்தூர் எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எனது தந்தையார் டிஆர்பாலு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!