சு.சாமிக்கு தோல்வியே கிடையாது - வரிந்து கட்டி வந்து நிற்கும் பாஜக...!

First Published Dec 21, 2017, 12:04 PM IST
Highlights
In the 2G spectrum case A. Raja and Kanimozhi released can not be said to be a failure for Subramaniam


2 ஜி அலைக்கற்றை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டது சுப்ரமணி சுவாமிக்கு தோல்வி என கூறமுடியாது எனவும் அப்பீல் செய்யும் போது பார்க்கலாம் எனவும் பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார். 

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. 

இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில், 2 ஜி அலைக்கற்றை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டது சுப்ரமணி சுவாமிக்கு தோல்வி என கூறமுடியாது எனவும் அப்பீல் செய்யும் போது பார்க்கலாம் எனவும் பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார். 
 

click me!