
ஆர்.கே.நகரில் காலை 11 மணிவரை 24% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆர்.கே.நகரில் நீண்ட இழுபறிக்குப்பிறகு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக தினகரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆர்.கே.நகரில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 258 வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, காலை 11 மணி நிலவரப்படி 24% வாக்குகள் பதிவாகியுள்ளன.