தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்... தேர்தல் ஆணையம் அதிரடி..!

Published : Mar 10, 2019, 07:24 PM IST
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்... தேர்தல் ஆணையம் அதிரடி..!

சுருக்கம்

காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.   

காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும். ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, ’’ காலியாக உள்ள 21 தொகுதிகளில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் உள்ளதால் அங்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறாது. 

மீதமுள்ள தொகுதிகளான பூந்தமல்லி, பெரம்பூர், திருப்பரங்குன்றம், சோழிங்கநல்லூர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், பாப்பிரெட்டியாபட்டி, திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், நிலக்கோட்டை ஆகிய 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்றே இடைத்தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!