நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்..! காஷ்மீர் மாநிலத்தில் நிறுத்தி வைப்பு..!

Published : Mar 10, 2019, 07:04 PM IST
நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்..! காஷ்மீர் மாநிலத்தில் நிறுத்தி வைப்பு..!

சுருக்கம்

தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் ஏப்ரல் 18-ம் தேதியே நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

 ஏப்ரல் 11ம் தேதி முதல் கட்டமாக ஏப்ரல் 11ம் தேதி - 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கும், 2 -ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18ல் 13 மாநிலங்களில் உள்ள  97 தொகுதிகளுக்கும் நடத்தப்பட உள்ளது.  3 -ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி -14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கும்,  ஏப்ரல்- 29ம் தேதி 4 -ம் கட்ட தேர்தல் - 9 மாநிலங்களில் உள்ள  71 தொகுதிகள்  தேர்தல் நடத்தப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி பதவிக்காலம் முடிய உள்ள சிக்கிம் மாநிலத்தில் மே 27-ந் தேதியும், ஆந்திரா மாநிலத்தில் ஜூன் 18-ம் தேதியும், ஒடிசாவில் ஜூன் 11-ம் தேதியும், அருணாசலபிரதேசம் ஜூன் 1-ம் தேதி சட்டசபை தேர்தல்களும் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என பார்க்கப்பட்டது. ஆனால் காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?