இன்னும் 3 வருஷம்தான், பாஜக என்ற கட்சி இருந்ததற்கான தடயமே இருக்காது... வெறுப்பேற்றும் டிகேஎஸ் இளங்கோவன்.

Published : Sep 24, 2021, 02:07 PM IST
இன்னும் 3 வருஷம்தான், பாஜக என்ற கட்சி இருந்ததற்கான தடயமே இருக்காது... வெறுப்பேற்றும் டிகேஎஸ் இளங்கோவன்.

சுருக்கம்

பாஜகவின் கொள்கைகள் எங்காவது  நேர்மையான ஆட்சி அமைத்துள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும், அந்த அளவிற்கு அவர்கள் குறுக்கு வழியில் மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றனர் என்றார்,  

இன்னும் மூன்று ஆண்டுகளில் பாஜக என்ற காட்சி இருந்ததற்கான அடையாளம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக கொள்கைகள் எங்காவது நேர்மையான ஆட்சி அமைத்துள்ளதால் என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் எனவும் அவர் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது,  

பாஜகவின் கொள்கைகள் எங்காவது  நேர்மையான ஆட்சி அமைத்துள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும், அந்த அளவிற்கு அவர்கள் குறுக்கு வழியில் மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றனர் என்றார், வேலை கேட்டு நீதிகேட்டு எங்கேயாவது மக்களும் இளைஞர்களும் போராடினால் அந்தப் போராட்டத்தை எப்படி தடுப்பது என்று தெரியாமல் அவர்கள்மீது வன்முறையை பாஜக ஏவி விடுகிறதுதான் பாஜகவின் வாடிக்கை என்றும் அவர் குற்றம் சாட்டினார். உண்மையிலேயே பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு பணியாற்றுகிறாரா அல்லது நாட்டிலுள்ள இரண்டு பணக்காரர்களுக்கு புரோக்கராக.? என்று தெரியவில்லை என அவர் கடுமையாக விமர்சித்தார். 

பொய் சொல்லி கோடிக்கணக்கான பணத்தை கொட்டி ஆட்சிக்கு வந்தவர்கள் பாஜகவினர், ஆனால் இன்னும் மூன்று ஆண்டுகளில்  பாஜக என்ற ஒரு கட்சி இருந்ததற்கான அடையாளம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். 2023-ம் ஆண்டில் திரிபுராவில் தேர்தல் வருகிறது அதற்கான முடிவை இப்போது திரிபுராவில் நடந்த வன்முறை மூலம் அதன் விளைவையும் இப்போதே பாஜகவினர் தெரிந்து கொண்டிருப்பார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!