ஓப்பனிங் இன்னிங்ஸில் டக் அவுட்... பூஜ்ஜியத்தில் துவங்கிய ராஜ்ஜியம்... ராகுலை கலாய்க்கும் பாரிக்கர்!

First Published Dec 18, 2017, 3:05 PM IST
Highlights
In his opening innings he scored zero says Goa CM Manohar Parrikar


ராகுல் காந்தி தனது ஓபனிங் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகியுள்ளார் என்று கலாய்த்திருக்கிறார் கோவா முதல்வரும் முன்னாள் ராணுவ அமைச்சருமான மனோகர் பாரிக்கர். 

ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை  அன்றுதான் முறைப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்  கொண்டார். அவர் பொறுப்பேற்றதும், சோனியா காந்தி தனது பொறுப்புகளை எல்லாம் ராகுலிடம் கொடுத்துவிட்டு, அவர்தான் இனிமேல் கட்சிப் பொறுப்பை கவனித்துக்  கொள்வார் என்றும், தாம் இனி இவற்றில் இருந்து விலகிக் கொண்டு ஓய்வு எடுக்கப் போவதாகவும் கூறியிருந்தார். 

ஆனால், ராகுல் காந்தி துணைத் தலைவர் ஆனது முதல் அவரால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. குடும்பச் சொத்து போல் கருதப் படும் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ரேபரேலி தொகுதியில் கூட தங்கள் செல்வாக்கை இழக்கும் நிலை வந்துவிட்டது. 

ராகுல் பொறுப்பேற்ற பின்னர், நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, பின்னர் சில மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியது. அதன்பின்னர் ராகுல் எங்கு சென்றாலும், அவரது ராசி என்று முத்திரை குத்தப் பட்டது. அவ்வப்போது ராகுலும் எதையாவது செய்து, செல்வாக்கை நிலை நாட்ட முயற்சி செய்வார். ஆனாலும் அவருக்கு தோல்வியே கிடைத்து வருகிறது. 

இம்முறையும், குஜராத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றுக் காட்டுவார், மாநிலத்தில் ஆளும் பாஜக., மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மாநிலத்தில் உள்ள வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, எனவே காங்கிரஸின் வெற்றி சுலபம்தான் என்று கணக்குப் போட்டு, எல்லாவிதத்திலும் காங்கிரஸார் மாநிலத்தில் ரவுண்டு கட்டினார்கள். ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகள் என்னவோ, ராகுலுக்கு தோல்வியையே பரிசளித்திருக்கிறது. 

காங்கிரஸின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டு,  முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்ட ராகுலுக்கு வாழ்த்து சொல்வதைக் கூட, முன்கூட்டியே முடித்து விட்டனர் காங்கிரஸார். இன்று அவரை சந்தித்து வாழ்த்து சொன்னால் எப்படி ஆகுமோ என்ற நம்பிக்கையில், ஞாயிற்றுக்  கிழமையே, பெரும்பாலான காங்கிரஸாரும் வரிசை கட்டி நின்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டனர். குஜராத் மற்றும் ஹிமாசல் தோல்வியை வைத்துக் கொண்டு அவருக்கு வாழ்த்து சொன்னால் நன்றாக இருக்காது என்பதை முன்கூட்டியே கணித்திருந்தனர் காங்கிரஸார் என்பதுதான் இதில் சுவாரஸ்யம். 

இன்றைய நாள் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது. இன்றுதான் பெரும்பாலான எம்.பி.க்களும் தில்லியில் இருப்பர். இருப்பினும் முந்திக் கொண்டு நேற்றே வந்து ராகுலுக்கு வாழ்த்து சொல்லிய அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதுபோல், பூஜ்ஜியத்துடன் தனது ராஜ்ஜியத்தை துவங்கியிருக்கிறார் ராகுல்! 

அதைத்தான், மனோகர் பாரிக்கரும் “அவரது ஓபனிக் இன்னிங்க்ஸில் அவர் ஜீரோ ரன் தான் எடுத்திருக்கிறார்” என்று கலாய்த்திருக்கிறார். 

click me!