நாடாளுமன்றத்துக்கு இதுவரை நடந்த இடைத்தேர்தல்கள் 30 … 24 –ல் படுதோல்வி!! அச்சத்தில் பாஜக!!

By Selvanayagam PFirst Published Nov 8, 2018, 7:02 AM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவி ஏற்றுக்கொண்ட பின் இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற 30 இடைத் தேர்தல்களில் 24 தொகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள், எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்பதால், பாஜக தலைவர்கள் கலக்கம் அடைந் துள்ளனர்

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த, 2014-ஆம்ஆண்டில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்த 2 தொகுதிகளையும் பாஜக வென்றது. 2016-ஆம் ஆண்டிலும் 2 தொகுதிகளை பாஜக வென்றது.

ஆனால், 2015,2017 மற்றும் 2018-ஆம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக ஒன் றில் கூட வெற்றிபெற முடியவில்லை.

.பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில்தான் பாஜக-வின் தோல்வி ஆரம்பமானது. இந்த தொகுதி பாஜக மூத்த தலைவர் வினோத் கன்னாவுக்கு செல்வாக்கான தொகுதி. 4 முறை அவர் வெற்றி பெற்றிருந்தார். கடைசியாக 2014-இல் வெற்றி பெற்றிருந்த அவர் திடீரென மரணம் அடைந்ததால், 2017 அக்டோபர் 11-இல் இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆனால், பாஜக நிறுத்திய ஸ்வரன் சலாரியா, காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹரிடம், சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.

2018 பிப்ரவரியில், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், அல்வார் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இங்கும் பாஜக-வுக்கு தோல்விதான்.

அடுத்த மிகப்பெரிய அதிர்ச்சி என்றால், அது உத்தரப்பிரதேசத்தில் நடந்ததுதான். உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய முதலமைச்சர்  ஆதித்யநாத் தொடர்ச்சியாக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி கோரக்பூர். இங்கு2014 மக்களவைத் தேர்தலில் 3 லட்சத்து12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்ய நாத் வெற்றி பெற்றிருந்தார்.ஆனால், 2018 மார்ச்சில் நடந்த இடைத்தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் பாஜகவேட்பாளர் தத் சுக்லா, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரவீண் குமாரிடம் சுமார் 21 ஆயிரத்து 961 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

பூல்பூரிலும் பாஜக வேட்பாளர் கவுசிலேந்திர சிங் படேல், சமாஜ்வாதி கட்சிவேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங்படேலிடம், 59 ஆயிரத்து 613 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்த தொகுதி உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய துணை முதலமைச்சர்  கேசவ் பிரசாத் மவுரியாவென்றிருந்த தொகுதியாகும்.

இந்த தொடர் தோல்விகளால் 2014-இல் 282 எம்.பிக்களுடன் ஆட்சிக்கு வந்த பாஜக-வின் பலம் 272 ஆக சரிந்தது. கடைசியாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர் மற்றும் பண்டாரா - காண்டியா,நாகாலாந்து ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இவற்றில் மகாராஷ்டிராவின் பால்கர் தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது. உத்தரப்பிரதேசத்தின் நூர்பூர் தொகுதியை சமாஜ்வாதி கட்சியிடமும், கைரானா தொகுதியை ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியிடமும் பாஜக இழந்தது.

நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றி பெற்றது.இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் 3 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 1 –ல் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.

மாண்டியா மற்றும் பெல்லாரி பல ஆண்டுகளாக பாஜக கைவசம் இருந்த தொகுதிகளில் அந்த கட்சி படு தோல்வி அடைந்தது.

மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு பதவிக்கு வந்த பிறகு,17 இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 14 இடைத்தேர்தல்களில்பாஜக தோல்வி அடைந்துள்ளது.

மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர் தலை மட்டும் எடுத்துக் கொண்டால், 2014-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 30 மக்களவைத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இவற்றில் 6 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மீதியுள்ள பாஜக 24 தொகுதிகளில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள், எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்பதால், பாஜக தலைவர்கள் கலக்கம் அடைந் துள்ளனர்

click me!