அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Jul 9, 2020, 10:53 AM IST
Highlights

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் வரும் 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்நிலையில் போதிய வசதிகள் இல்லாததால் ஏழைமாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் , ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து கூறுகையில், ’’தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது. டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும். பிளஸ்-2வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது.

12-ம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம்’’என அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!