கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published May 13, 2020, 5:33 PM IST
Highlights

கல்லூரியில் உள்ள இரு சூழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பழைய முறையில் செயல்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
 

கல்லூரியில் உள்ள இரு சூழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பழைய முறையில் செயல்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 12-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 22,802 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு தேர்வுகள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்லூரி செயல்படும் நேரம் குறித்தும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி,  தமிழகத்தில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரு சூழற்சி முறை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. காலை மற்றும் மதியம் என இரண்டு முறை சூழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. காலை 7 மணிகெல்லாம் வகுப்புகள் தொடங்கப்படுவதால் பெரும்பாலான மாணவர்கள் சரியாக சாப்பிட முடியாமல் இரத்த சோவை போன்ற நோய்கள் ஏற்ப்படுவதால் இரு சூழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் 2006க்கு முன்பு இருந்த நிலையே கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!