கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்...! "எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்"..!

Published : Aug 07, 2018, 02:48 PM IST
கருணாநிதி  உடல்நிலை கவலைக்கிடம்...! "எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்"..!

சுருக்கம்

கலைஞரின் உடல் நிலையில் தொடர் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. காவேரி மருத்துவமனை எதிரே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி உள்ளனர்.

கலைஞரின் உடல் நிலையில் தொடர் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. காவேரி மருத்துவமனை எதிரே  ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி உள்ளனர்.கலைஞரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தேசிய தலைவர்கள் முதல் கட்சி தொண்டர்கள் வரை காவேரி மருத்துவமனைக்கு  வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பாதுகாப்பு நலன் கருதி சென்னை முழுக்க பல்வேறு இடங்களில், போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது 

அதில் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை காணலாம்

ஆயுதப்படை காவலர்கள் 500 பேரும், தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள் 700 பேரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல்.

முக்கிய ஏற்பாடுகள் செய்வது குறித்து ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளுடன் தலைமை நிலைய மேலாளர்கள் ஜெயக்குமார், பத்மநாபன் ஆலோசனை

மீண்டும் திமுக முக்கிய பொறுப்பில் முக.அழகிரி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்  என கூறப்படுகிறது 

24 மணி நேர கால கெடு முடியும் தருவாயில் இன்று மாலை 6 மணிக்கு பிறகு காவேரி மருத்துவமனையில் இருந்து முக்கிய செய்திக்குறிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

கருணாநிதி உடல்நிலையில் தொடரும் பின்னடைவு.. சென்னை மாநகர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!