அதிமுக கூட்டணியில் தேமுதிக..? விஜயகாந்துக்கு 5ம் தேதி வரை கெடு..!

By Thiraviaraj RMFirst Published Mar 3, 2019, 2:29 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து முடிவெடுக்க வரும் 5ம் தேதி முக்கிய நிர்வாகிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். 
 

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து முடிவெடுக்க வரும் 5ம் தேதி முக்கிய நிர்வாகிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

 

அதிமுக கூட்டணியில் தொகுதி பேரம் படியாததால் கூட்டணியை உறுதி செய்யாமல் இருந்து வந்தது தேமுதிக. பாமகவுக்கு நிகராக சீட் ஒதுக்க வேண்டும் என விடாப்பிடி காட்டி வந்த தேமுதிக 5 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியானது. இதனால் காலையோ மாலையோ கூட்டணி அறிவிப்பு வெளியாகலாம் என கடந்த சில தினங்களாக எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் சந்தித்துப் பேசினார். 

அவர் அரசியல் குறித்து பேசியதாகவும், நடப்புகால அரசியலை கூறி வேறு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் தெரிவித்ததாகவும் கூறினார். இதன் அடுத்த கட்டமாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 5ம் தேதி கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் கட்சியின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள நிர்வாகிகள் அவைவரும் சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் அன்றைய தினம் தேமுதிக கூட்டணி முடிவை அறிவிக்கலாம் எனக்கூறப்படுகிறது. அன்றைய தினம் அதிமுக கூட்டணியில் இணைகிறதா? அல்லது மாற்று முடிவை தேமுதிக எடுக்கிறதா? என்பது தெரிய வரும். அதேவேளை கூட்டணியை முடிவு செய்வதால் அதிருப்தியில் உள்ள அதிமுக வரும் 5ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் எனக் கெடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தலைமையில் பாஜக மற்றும் பாமக கூட்டணி உடன்பாடு செய்து கொண்டுள்ளது. இதுதவிர, புதிய தமிழகம் கட்சியும் அதிமுக உடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. 

click me!