அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பிரச்சாரம் செய்ய போகிறாராம் அன்புமணி!

By Vishnu PriyaFirst Published Mar 3, 2019, 1:48 PM IST
Highlights

*    தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும்! என்று ஸ்டாலினுக்கு அழகிரி விட்ட சாபம் நிச்சயம் பலிக்கும். அதேபோல் ‘அ.தி.மு.க. எங்களுக்கே சொந்தம்.’ என்று அ.ம.மு.க.வினர் சொல்வது எருமைக்கு புலி வேஷம் போட்டது போல் இருக்கிறது: அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் செல்வராஜ். 
 

*    தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும்! என்று ஸ்டாலினுக்கு அழகிரி விட்ட சாபம் நிச்சயம் பலிக்கும். அதேபோல் ‘அ.தி.மு.க. எங்களுக்கே சொந்தம்.’ என்று அ.ம.மு.க.வினர் சொல்வது எருமைக்கு புலி வேஷம் போட்டது போல் இருக்கிறது: அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் செல்வராஜ். 

(அழகிரி சாபம் பலிக்கிற மாதிரியே, ‘எத்தனை தொகுதி கொடுத்தாலும் அத்தனையிலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. தோற்கும்’ன்னு தம்பிதுரை விட்ட சாபமும் பலிக்கும்தானே?  அது சரி, ஜெயலலிதா இருக்கும் போது சசி, தினகரனை பார்க்கிறப்ப உங்களுக்கு புலியா தெரிஞ்சுதா இல்லே எருமையா தெரிஞ்சுதா?)

*    லோக்சபா தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தப்போகிறேன். அப்போது எனக்கு கிடைக்கும் ஓட்டுக்கள் மூலம் நான் தவிர்க்க முடியாத சக்தியாக மாற வாய்ப்புள்ளது: வேல்முருகன். 

(சிரிப்பு வர்ற மாதிரி சீரியஸா பேசாதீங்கன்னு உங்களுக்கு எத்தனை வாட்டிண்ணே சொல்றது. புரியுது, புரியுது பண்ருட்டி, கடலூர்ல வெயில் ஓவராயிட்டே போறது புரியுதுண்ணே, அதுக்காக இப்படியெல்லாமா?)

*    மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓயுவு ஊதியம் வழங்க வேண்டும்! நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- என்பதையெல்லாம் வலியுறுத்தித்தான் எங்களின் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இருக்கும்: அன்புமணி ராமதாஸ். 

(தல, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தினா உங்களோட நிகழ்ச்சி பிரசாரம் மாதிரி இருக்காது, அ.தி.மு.க.வுக்கு எதிரான கண்டன கூட்டம் மாதிரில்ல இருக்கும். உங்க ஜட்ஜுமெண்டு ரொம்ப்ப்ப்ப தப்பா போயிட்டே இருக்குது சின்ன நாட்டாம, பார்த்து சூதானமா இருங்க.)

*    கடந்த காலங்களில் காங்கிரஸ் அறிவித்த திட்டங்களைப் பெயர் மாற்றி பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருகிறது: காங்கிரஸ் தலைவர் சஞ்சய் தத். 

(அப்போ....’மோடி செயல்படுத்துவதெல்லாம் மக்கள் விரோத திட்டங்களே!’ அப்படின்னு ராகுல் மேடைக்கு மேடை பேசுறதெல்லாம் போன ஆட்சியில உங்காளுங்க  போட்டதுதானா. அடப்பாவீங்களா, சொந்த கட்சியை திட்டுறோமுன்னு புரியாமலே அந்தப் பப்பு பையன் பேசிட்டே இருக்காரேய்யா, அவரு மைக்க ஆஃப் பண்ணுங்க பாஸ்)

*    பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்னு சொல்லியிருந்தேனே தவிர அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்னு சொல்லவில்லை: சரத்குமார். 

(அண்ணாச்சி, உங்களோட இந்த தலைசுத்த ஸ்டேட்மெண்டை பார்த்துட்டு, தி.மு.க. பேச்சாளர் ஒருத்தர் சொல்றாரு...‘சரத்குமார் ஒரு பாட்டாளிய்யா. அதனால அவரு ரேஞ்சுக்கு கூலிகள், அடிமைகளான  அ.தி.மு.க. கூடதாம்லே கூட்டணி வைப்பாரு. அந்த அடிமைகளோட முதலாளியான பி.ஜே.பி.கூட கூட்டு வைக்கமாட்டாரு. சரியாதாம்லே சொல்லியிருக்காரு.’ அப்படின்னு. 

இந்த அவமானம் நமக்கு தேவையா அண்ணாச்சி?)

click me!