டி.என்.ஏ. சோதனைக்கு தயார்; நான் தான் ஜெ.யின் உண்மையான மகள்; பரபரப்பை கிளப்பும் பெங்களூரு பெண்!

 
Published : Aug 30, 2017, 10:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
டி.என்.ஏ. சோதனைக்கு தயார்; நான் தான் ஜெ.யின் உண்மையான மகள்; பரபரப்பை கிளப்பும் பெங்களூரு பெண்!

சுருக்கம்

Im the real daughter of Jayalalitha

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தன் சொந்த தாய் என பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் மஞ்சுளா (எ) அம்ருதா (28). இவர், மறைந்த ஜெயலலிதா தனது சொந்த தாய் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், கடந்த 1960 ஆம் ஆண்டு பிரபல நடிகையாக இருந்த என் பாட்டி சந்தியா - ஜெயராம் தம்பதியின் 3 பிள்ளைகளில் என் தாய், ஜெயலலிதா என்கிற கோமளவள்ளியும் ஒருவர். அவர் மகள்தான் நான். என் பெயர் மஞ்சுளா என்கிற அம்ருதா. என்னை அம்மு என்றும் செல்லமாக அழைப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும், சோபன்பாபுவின் முதல் மனைவியின் எதிர்ப்பால் ஜெயலலிதா - சோபன்பாபு திருமணம் நின்று போனதாகவும் அதில் கூறியுள்ளார்.

தான் குழந்தையாக இருந்தபோது, பெங்களூரைச் சேர்ந்த சைலஜா - சாரதி தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்ததாகவும், ஜெயலலிதாவின் மகள் என்ற ரகசியத்தை எங்கும் கூறவில்லை என்றும் இது தொடர்பாக ஜெயலலிதா சத்தியம் வாங்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

1996 ஆம் ஆண்டில், சென்னை, போயஸ் கார்டனில் தான் ஜெயலலிதாவை சந்தித்தேன் என்றும், எந்த காரணத்தைக் கொண்டும் அரசியலுக்கும் சினிமாவுக்கும் வர வேண்டாம் என ஜெயலலிதா எச்சரித்ததாக மஞ்சுளா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா இறப்பு இயற்கையான மரணம் அல்ல என்றும், உடல்நிலை பாதிப்பாலும் அவர் இறக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளதாகவும், சசிகலா நடராஜன், தினகரன், தீபக் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்ததில் தெரிவித்துள்ளார்.

என் தாய் அவர்தான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. என்னும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மஞ்சுளா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..