உண்மையிலேயே நான் தான் பிக்பாஸ்... காலரைத் தூக்கி விடும் சீமான்..!

Published : Mar 30, 2021, 12:34 PM IST
உண்மையிலேயே நான் தான் பிக்பாஸ்... காலரைத் தூக்கி விடும் சீமான்..!

சுருக்கம்

தமிழகத்தில் பணம் கொடுக்காமல் தனக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. எனவே உண்மையிலேயே நான் தான் பிக்பாஸ் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் பணம் கொடுக்காமல் தனக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. எனவே உண்மையிலேயே நான் தான் பிக்பாஸ் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

போரூர், திருவொற்றியூர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ’’திமுக, அதிமுக.,விடம் தொலைநோக்கு திட்டங்களே இல்லை. சலுகை மானியம் கொடுப்பதே இரு கட்சிகளின் வேலை. மழைநீரை சேமிப்பதற்கான திட்டங்கள் கூட இரு கட்சிகளிடம் இல்லை. சீமானுக்கு ஓட்டுப்போடுங்கள். உதயசூரியனுக்கும், இரட்டை இலைக்கும் ஓட்டு போட்டால் எங்களை சுடுகாட்டில் வீசுங்கள். சீமானுக்கு ஓட்டு போட்டால், ஒரு ஓட்டு வீணாகி விடப்போகிறதா?

எந்த முதல்வருக்கு சாராய ஆலை உள்ளது. இவர்களுக்கு உள்ளது. முதல்வரை தேர்வு செய்யவில்லை. சாராய ஆலை முதலாளிகளை தேர்வு செய்கின்றனர். தமிழகத்தில் பணம் கொடுக்காமல் தனக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. எனவே உண்மையிலேயே நான் தான் பிக்பாஸ்’’என அவர் பேசினார். 

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!