என்.ஆர்.காங்கிரஸ் அதிர்ச்சி... ரங்கசாமியின் தீவிர ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு...!

Published : Mar 30, 2021, 12:09 PM ISTUpdated : Mar 30, 2021, 01:31 PM IST
என்.ஆர்.காங்கிரஸ் அதிர்ச்சி... ரங்கசாமியின் தீவிர ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு...!

சுருக்கம்

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஒருபக்கம் ஓரணியாக திரண்டுள்ளன. மற்றொரு பக்கம் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பரும் தீவிர ஆதரவாளர் புவனேஸ்வரன். இவர் கடந்த காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுள்ளார். இன்று அவரது வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலேயே வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பிரிவுகளாக சேர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் அங்கு எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி இருந்த போதிலும் அவரது உறவினர்கள் வீட்டில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று மாலை பிரதமர் மோடி பரப்புரை செய்தவற்காக புதுச்சேரி வருதை தர உள்ள நிலையில் இந்த வருமான வரித்துறை சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரங்கசாமி பல்வேறு இடங்களில் பரப்புரை செய்யும் போது என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டும் தான் பரப்புரை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?