
தேசத்துரோக வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
சென்னை, அடையாறில் டி.டி.வி. தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்றார். நோட்டீசை தயார் செய்யச் சொன்னது நான்தான் என் எழுதி வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சர்ச்சைக்குரிய நோட்டீசை எனது ஆதரவாளர்கள் தயார் செய்திருந்தாலும், தேசத்துரோகம் என்று கூற எதுவும் இல்லை என்றார். தேசதுரோக வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு நோட்டீசில் எந்த வாசகங்களும் இல்லை என்றும் டிடிவி கூறினார்.
தேசத்துரோக வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம். நோட்டீசை தயார் செய்யச் சொன்னது நான்தான் என்று எழுதி வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
போதிய மருத்துவ சான்றிதழ் இல்லாததால் சசிகலாவின் பரோல் மனுவை நேற்று சிறை நிர்வாகம் நிராகரித்தது என்றும், போதிய ஆவணங்கள் கிடைத்தவுடன் சசிகலாவுக்கு பரோல் கேட்டு மீண்டும் பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் புதிய மனு அளிக்கப்படும் என்றும்
கூறினார்.
18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வரும் என நம்பிக்கை உள்ளது என்றார். போலீசார் பொய் வழக்கு பதிவு செய்யும் பட்சத்தில் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவமனையில் நடராசனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும், அவரைப் பார்ப்பதற்காக மருத்துவமனை செல்ல உள்ளதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.